Friday 30 October, 2009

Gmail மின்னஞ்சலில் படங்களை (Inline) நேரிடையாக இணைப்பது எப்படி ?



வணக்கம் நண்பர்களே, 
மின்னஞ்சல் சேவையில்  மிக வேகமாக வளர்ந்து வருகின்றது ஜிமெயில் .கூடிய விரைவில் எல்லா மின்னஞ்சல் சேவையையும் விட அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும். ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் இந்த அசுர வளர்ச்சி.இதன் முக்கிய அம்சம் எளிமை .எளிமையை தவிர வேறொன்றுமில்லை. ஜிமெயில் லேப்ஸ் மூலம் பல  புதிய  வசதிகளை கொடுக்கின்றது.அதில் ஒரு முக்கியமான சேவைதான் படங்களை மின்னஞ்சலுடன் இணைப்பது.பல பேருக்கு இந்த வசதி இருப்பது தெரியாது.மிகவும் பயனுள்ள வசதி இனி படங்களை Outlook போன்றவற்றை கொண்டு இணைக்காமல் நேரிடியாகவே இணைக்கலாம்.இனி Attachments தேவையில்லை.

இந்த வசதியை பெற : 
உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையுங்கள்.வலது மூலையில் உள்ள பச்சை குடுவை போல் உள்ள சிறிய படத்தினை கிளிக் செய்யுங்கள்.அல்லது Settings -> Labs தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். Have Fun :)



Inserting Images என்பதனை தேடி கீழே படத்தில் உள்ளது போல் தேர்வு செய்யுங்கள்.



இனி நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும்போது ,படங்களை இணைக்க இந்த பட்டனை சொடுக்கினால் போதும்.



Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Gmail மின்னஞ்சலில் படங்களை (Inline) நேரிடையாக இணைப்பது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Tuesday 27 October, 2009

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0



வணக்கம் நண்பர்களே,

துண்டாக்கல் (Fragmentation) என்றால் என்ன ?
வன்தட்டில் கோப்புகளை சேமிக்கும் போது,கோப்புகள் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை.வன்தட்டில் காலியாக உள்ள இடத்தில்,கோப்புகள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும்.எந்த வகை கோப்புகள் ஆனாலும் ,அதன் அளவு எவ்வளவு பெரிதாயினும் இவ்வாறே சேமிக்கப்படும்.

ஏன் Defragmentation செய்ய வேண்டும் ?
வன்தட்டில் சேமித்த கோப்புகளை ,நாம் பயன்படுத்தும்போது ,கணினி ஆங்காங்கே
சேமிக்கபட்ட துண்டுகளை ஒன்றாக்கி கோப்புகளாக தரும். சிறிய கோப்புகளாக இருந்தால் ,கணினியினின் வேகம் குறைவது நமக்கு தெரிவதில்லை.இதுவே சற்று பெரிய கோப்புகளாக இருந்தால் ,அதனை ஒரு முழுமையான கோப்பாக மாற்ற கணினி நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.இப்பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு.

எப்படி Defragmentation செய்வது ?
இப்படி ஒவ்வொரு முறையும் நமது நேரத்தையும் ,கணினியின் ஆற்றலை குறைக்கும் இப்பிரச்சனைக்கு Defragemnt செய்வதுதான் ஒரே வழி.
Goto My Computer .Right Click -> Manage -> Disk Defragmenter


இந்த முறையில் நமது வன்தட்டில் பிரிக்கபட்ட பிரிவுகளான (C,D,E etc.,) போன்றவற்றை defragment செய்ய இயலும் .ஆனால் ஒரு File அல்லது Folder இதில் Defragment செய்ய முடியாது.

Power Defragmenter 3.0 :(Portable)

நமது கணினியின் வன்தட்டை Defragment செய்ய சிறந்த இலவசமான மென்மொருள் தான் Power Defragmenter 3.0. இதன் மூலம் நாம் ஒரு File அல்லது Folder defragment செய்து கொள்ளலாம் .மிகவும் இலகுவான மென்பொருளான இது பயன்படுவதற்கும் எளியது.
இது மைக்ரோசாப்டின் Config என்னும் மென்பொருளை அடிபடையாக கொண்டு இயங்குகின்றது.இதனை கணினியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை.


தரவிறக்கி PowerDefragmenter.exe டபுள் கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு காண்பிக்கும்.இங்கே
Yes கிளிக் செய்யவும். 

இப்போது மைக்ரோசாப்டின் CONFIG மென்பொருளை அது தானாகவே தரவிறக்கம் செய்து கொள்ளும் .


இப்போது நாம் மென்பொருளை பயன்படுத்த தயார்.Next கிளிக் செய்யவும்



உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்யலாம்.


Files:

Folders:

Partitions(C,D,E etc.,):


Defragmention in Action :


 
அவ்வளவுதான். Have Fun :)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday 26 October, 2009

Blogger-ன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர் - Blog Tips 1



வணக்கம் நண்பர்களே,
தமிழில் பதிவுகள் எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.மேலும் பல நண்பர்கள் இனிய தமிழில் பதிவு எழுத  முன்வர  வேண்டும் .மேலும் பல புதுமையான படைப்புக்கள் படைத்து  இணையத்திலும், தமிழினை இனிக்கச் செய்வோம்.

வலைபதிவர்களுக்கான சிறு சிறு குறிப்புகளை இந்த தொடர் பதிவில் எழுதுகிறேன்.பதிவு எழுதும் நண்பர்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறேன்.உங்களுக்கு பதிவில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.முடிந்தவரை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.நன்றி.
 
தினம் தினம் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் கூகுளின் மற்றுமோர் சேவை,Blogger-இன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர்.

இந்த சேவையை பெற :
  1. உங்கள் பிளாக்கர் கணக்கில் உள் நுழையுங்கள்.
  2. Settings கிளிக் செய்யுங்கள்.கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள். 


      3.Save Settings கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்.Have Fun :)

மேம்படுத்தப்பட்ட எடிட்டரின் புதிய வசதிகள்:

1.Preview: நீங்கள் இப்போது வலைத்தளத்தில் எப்படி உங்கள் பதிவு தோன்றுமோ.. அப்படியே பார்க்கலாம்.



  2.Increase Height :எடிட்டரின் உயரத்தை அதிகபடுத்தலாம்.எடிட்டரின் கீழ்  வலது மூலையில் மௌசால் இழுத்து உயரத்தை கூட்டலாம்.அகலத்தை கூட்ட முடியாது. 



3.Post Options :  பழைய எடிட்டரில் ,நீங்கள் பதிவை   எழுத ஆரம்பித்த நேரமே பதிவிடும் போதும் தெரியும்.அதை நாம்தான் மாற்ற வேண்டும் .இது மாற்றி அமைக்கபட்டுள்ளது.



4.அழகிய டூல்பார்:  




5.Add muliple Images :
இப்போது பதிவிற்கு வேண்டிய  படங்களை அனைத்தையும் தேர்வு செய்து விட்டு .வேண்டிய இடத்தில் இடம் பெறச் செய்யலாம்.




6.Image Bubble:படங்களை அளவினை இங்கேயே மாற்றலாம்.படத்தினை டபுள் கிளிக் செய்தால் போதும் ,வேண்டிய அளவினை தேர்வு செய்யலாம்.


Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Blogger-ன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர் - Blog Tips 1SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Thursday 22 October, 2009

Firefox's AgingTab - அசத்தலான பயனுள்ள நீட்சி...


வணக்கம் நண்பர்களே,
நேற்று நான் FireFox-இன் அசத்தலான நீட்சிகளில் ஒன்றான FlagTab பற்றி பகிர்ந்து இருந்தேன்.பின்னூட்டத்தில் நண்பர் தாமஸ் ரூபன்  "FireFox-இல் நாம் பல்வேறு
Tab ஓபன் செய்து வைத்து இருப்போம் நாம் எந்த Tab பார்த்துக்கொண்டு உள்ளோம் என்பதை அறிந்துக்கொள்ள ஏதாவது வழிமுறைகள் உள்ளதா?" என கேட்டிருந்தார்.

அதற்கு எதாவது வழி உள்ளதா என இணையத்தில் தேடியபோது இன்னொரு சிறப்பான நீட்சி இருப்பது தெரிந்தது.அதனை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இதோ நண்பர் தாமஸ் ரூபன் கேட்ட வசதியை  Aging Tab எனும் நீட்சி அளிக்கின்றது. 



தரவிறக்கி நிறுவி ,Restart செய்த பின்,உங்கள் Active Tab இப்படி தெரியும். 



நீங்கள் நீண்ட நேரம் ஒரு டேபினை திறந்து வைத்திருந்தால் அதன் நிறமும் மாறிவிடும்.



மேலும் உங்களுக்கு விருப்பமான நிறத்தினை நீங்கள் தேர்வு செய்யலாம்.
Tools --> Addons தேர்வு செய்யுங்கள். Aging Tabs Options தேர்வு செய்யுங்கள் ..


உங்களுக்கு வேண்டியவாறு நிறம் வசதியை மாற்றி அமைக்கலாம்.Have Fun :)

 
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Firefox's AgingTab - அசத்தலான பயனுள்ள நீட்சி...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

5 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Wednesday 21 October, 2009

Firefox's FlagTab - அசத்தலான பயனுள்ள நீட்சி...


வணக்கம் நண்பர்களே,
FireFox-இன் பாதுகாப்பு மற்றும் வேகம் போன்ற சிறப்பான அம்சங்களை
மேலும் சிறப்பாக்குவது அதன் நீட்சிகள்.(Addons).அதில் பல புதிய பயனுள்ள நீட்சிகள் பற்றி ஏற்கனவே பகிர்ந்துளேன்.அவ்வரிசையில் மேலும் ஒரு அற்புதமான நீட்சிதான் இந்த FlagTab.அதாவது உங்கள் டேப்களை நிறம்பிரித்து குழு சேர்க்க வல்லது.

நீங்கள் ஏற்கனவே IE8 (Internet Explorer 8) பயன்படுத்தி இருந்தால் உங்களுக்கு அந்த வசதி கோடா நிலையில் IE8-ல் இருப்பதை காணலாம்.அதை போலவே Firefox-ல் அந்த வசதியை நமக்கு தருவதுதான் FlagTab.


நீட்சியை நிறுவி Restart செய்த பின் உங்கள் டேப் மீது Right Click செய்திடுங்கள்.



உங்களுக்கு வேண்டிய நிறத்தினை தேர்வு செய்திடுங்கள்.FlagTab Options-->Options.





அவ்வளவுதான் இனி நீங்கள் விரும்பும் வண்ணம் உங்கள் டேப்களுக்கு வண்ணம் சேர்த்து குழு பிரித்து பயன் அடையலாம்.Have Fun :)


Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Firefox's FlagTab - அசத்தலான பயனுள்ள நீட்சி...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Wednesday 14 October, 2009

Yahoo's MEME - புதிய MicroBlogging வலைத்தளம்...


யாகூவின் MEME என்பது ,யாகூவின் புதிய MicroBlogging வலைத்தளம்.Twitter போல...ஆனால் ட்விட்டரை விட பல வசதிகள் உள்ளது.முகப்பு ட்விட்டரை போல் இருந்தாலும் இதில் பல புதிய வசதிகள் உள்ளன.ட்விட்டர் போல் இல்லாமல்,இதில் புகைப்படங்கள் ,காணொளிகள் ,பாட்டுக்கள் போன்றவற்றை பகிரலாம்.



  1. இதில் நீங்கள் அதிகபட்சமாக 2000 Character வரை பயன்படுத்தலாம்,ட்விட்டரில் இது 140 வரை மட்டுமே
  2. ட்விட்டரில் இருந்த ReTweet இதில் Repost ஆகி இருக்கின்றது.
  3. நீங்கள் மற்றவர்கள் பதிவுகள் பற்றி கருத்துக்கள் கூறலாம்.

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Yahoo's MEME - புதிய MicroBlogging வலைத்தளம்...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Friday 9 October, 2009

Online Vista - 50-வது பதிவு - கவிதை


வணக்கம் நண்பர்களே.,
நீங்கள் 98,2k,XP போன்ற இயங்குதளங்களை பயன்படுத்துபவரா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.விஸ்டா பற்றி அறிந்திருப்பீர்கள் ஆனால் அதனை நம்மில் பலர் பயன்படுத்தி இருக்க மாட்டோம்.விஸ்டா இயங்குதளம் உண்மையில் எப்படி காட்சியளிக்கும் எனபது கூட பலருக்கு தெரியாது.கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி அந்த தளத்திற்கு செல்லுங்கள்...
விஸ்டா போன்ற ஒரு desktop இந்த தளம் வழங்குகிறது.இந்த தளம் முழுக்க மைக்ரோசாப்டின் Silverlight தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் நீங்கள் File Explorer,Internert Explorer,Windows Media Player,Notepad,Paint,Spider,Solitaire,Chess போன்ற சின்ன சின்ன வசதிகளை காணலாம்.நீங்கள் விஸ்டாவை பார்த்திருந்தாலும்,ஒரு தடவை இந்த தளம் போய் பாருங்க.Simply Amazing... Online Vista

கிராமத்து பையனின் 50-வது பதிவு :

நானெல்லாம் தமிழ் வலைபதிவர் ஆவேன் என்று ஒரு கணம் கூட சிந்தித்து கிடையாது. 2008 ஆம் ஆண்டு ஓரிரு பதிவுகள் ஆங்கிலத்தில் போட்டுளேன்.ஆனால் அப்போதெல்லாம் தமிழ் வலைத்தளங்கள் பற்றி ஒன்றும் தெரியாது.கடந்த ஜூன் மாதத்தில் அண்ணன் டிவிஎஸ்50 அவர்கள் எழுதும் வலைத்தளத்தை பற்றி ஆனந்த விகடன் வரவேற்பறையில் குறிபிட்டிருந்தார்கள்.மறுநாள் அவரது தளத்தை பார்த்து வியந்து போனேன். எளிய ,சீரிய நடை அத்தனையும் தொழில்நுட்ப பதிவுகள்.மிகவும் பயனுள்ள பதிவுகள்... அப்போதுதான் .ஏன் நாமும், நமக்கு தெரிந்த தொழில்நுட்ப செய்திகளை பதிவிட கூடாது என்று.அடுத்த நாளே ஆரம்பித்து விட்டேன்.

முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தது.(ஏன் என்றால் தொழில்நுப்ட வார்த்தைகள் ஒன்று கூட எனக்கு தமிழில் தெரியவில்லை.இப்போதும் அப்படிதான் :))ஆனால் சக தமிழ் வலைத்தளங்களை படித்து தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டேன் .எனக்கு தட்டச்சவும் தெரியாது அதனால் பதிவு போட கொஞ்சம் சிரமம்(முதலில் தட்டச்ச கற்று கொள்ள வேண்டும்) .

இதோ கிராமத்து பையன் தளத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட நாலு மாதங்கள் ஆகிவிட்டது.இதுநாள் வரை ஆதரவு அளித்து வந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ,பின்னூட்டம் இட்டு உற்சாகபடுத்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

என் தளத்தின் முதல் தொடர்பவராக சேர்ந்த அண்ணன் கக்கு மாணிக்கம் அவர்களுக்கும் மற்றும் தொடரும் அனைவருக்கும் நிரம்ப நன்றி.

ஈமெயில் மூலம் பதிவுகளை படிக்கும் நெஞ்சங்களுக்கும், ரீடரில் படிக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

இதுவரை தொழில்நுட்ப பதிவுகள் மட்டுமே எழுதி வந்த நான்,இனி மகி's கார்னர் தளத்தில் எழுதி வந்த கவிதைகளையும் இந்த தளத்திலேயே எழுதலாம்
(கணினி கனவுகளும்,காதல் நினைவுகளும்) என்று உள்ளேன். உங்கள் ஆலோசனைகளை கூறவும்...

என் பிறந்த நாளான இன்று 50-வது பதிவை இடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... மீண்டும் அனைவருக்கும் நன்றி


இன்று எனது பிறந்த நாள்...

எனக்கான பரிசு
உன்னிடமே
இருக்கின்றது
உன் பார்வை...

உனக்கான பரிசு
என்னிடமே
இருக்கின்றது
என் காதல்...

என்றுதான் கிடைக்கும் பரிசு
எனக்கும்...
உனக்கும்...

(ஒரு மீள் கவிதை)

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Online Vista - 50-வது பதிவு - கவிதைSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

14 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Thursday 8 October, 2009

Firefox எத்தனை பேர் தரவிறக்கம் செய்றாங்க பார்க்கலாம் வாங்க...

உலகளவில் பலரின் நன்மதிப்பை பெற்று வரும் இணைய உலாவி Firefox. இது மற்ற உலாவிகளை விட பாதுகாப்பதும் கூட.இதனை எத்தனை பேர் ,எந்தெந்த நாட்டில் தரவிறக்கம் செய்கிறார்கள் என்று நேரடையாக பார்க்கலாம் வாங்க.

தளத்திற்கு சென்ற பிறகு நீங்கள் கீழ்கண்டவாறு ஒரு மேப்பினை பார்க்கலாம்.இதில் நீங்கள் விரும்பிய இடத்தை தேர்வு செய்து பார்க்கலாம் .


நீங்கள் தேர்வு செய்த இடத்தை கீழ்கண்ட Graph முழு விவரத்துடன் காணலாம்.

  • code Country code
  • name Country name
  • trend Changes in downloads per second over the last minute
  • cur Number of downloads for this country per second
  • min Minimum number of downloads per second over the last minute
  • max Maximum number of downloads per second over the last minute
  • total Total number of downloads since Firefox launch
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Firefox எத்தனை பேர் தரவிறக்கம் செய்றாங்க பார்க்கலாம் வாங்க...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

0 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Wednesday 7 October, 2009

கோப்புகளை Recover,Delete செய்வதற்கு இலவச மென்பொருள்கள்...


பல மென்பொருள்கள் இலவசமாக கிடைத்தாலும்,அத்தனையும் பாதுகாப்பானது என்று கூற முடியாது.அவற்றில் பல கணினிகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிரல்களான Virus(நச்சுநிரல்) , Spyware(உளவுநிரல்) மற்றும் Malware(தீங்குநிரல்) கொண்டிருக்கும்.அதனால் , இலவச மென்பொருள்களை தரவிறக்கும் முன் அவற்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றில் கவனம் கொள்ள வேண்டும். இலவச மென்பொருள்களை நமக்களிக்கும் நிறுவனங்களுக்கு முதலில் நன்றி சொல்வோம்.


1.Recover Deleted Files :
வேண்டிய
கோப்புகளை(File) தெரியாமல் அழித்து விட்டால் ,அவற்றை மீட்டெடுக்க உதவும் மென்பொருள்.நன்றாக வேலை செய்கின்றது.


2.Permanently Delete Files :
கோப்புகளை நிரந்திரமாக அழிக்க உதவும் மென்பொருள்.ஒரு முறை இம்மென்பொருளை கொண்டு அழித்துவிட்டால் மீண்டும் கோப்புகளை மீட்டெடுக்க முடியாது.



Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This கோப்புகளை Recover,Delete செய்வதற்கு இலவச மென்பொருள்கள்...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

0 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday 5 October, 2009

உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?


நம் வாழ்க்கையில டிஜிட்டல் சாதனங்களின் பங்கு இன்றியமையாதது.அவற்றில் பல மின்கலம் (Battery) மூலமே இயங்குகின்றது.மின்னேற்றி மூலம் மின்கலத்தின் சக்தியை தினமும் கூட்டுவோம்.ஆனால் எந்நேரமும் மின்னேற்றி (Charger) வைத்திருப்போம் என்று கூற முடியாது.மின்னேற்றி வைத்திருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத நிலை வரலாம். இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு நேர்ந்தால் எப்படி சமாளிப்பது ?

நாம் பயன்படுத்தும் மின்கல சாதனங்களை எப்படி ஆற்றல்மிக்கதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

வெப்பத்தை தவிருங்கள் :
நீங்கள் எந்த வகை மின்கல சாதனங்களை பயன்படுத்தினாலும் அதை தேவை படும்போது மட்டுமே அதனை உறைகளில் இருந்து வெளியே எடுங்கள்.மற்ற நேரங்களில் அதை பாதுகாப்பாக அதற்கான உறையிலே வைத்திருங்கள்.
வெப்பம்தான் மின்கலத்தின் முதல் எதிரி , நீங்கள் மடிக்கணினியை பயன்படுத்தாமல் வெளிய வைத்திருந்தால்,வெளிவெப்பம் ஊடுருவி மின்கலத்தில் வேதியல் மாற்றங்கள் நிகழும்.இதனால் மின்கலத்தின் சக்தி வீணாகும். நீங்கள் மின்கலத்தை குளுமையாக வைத்திருந்தால் ,மின்கலம் நீடித்து உழைக்கும்.நினைவில் கொள்ளுங்கள் .

பயன்படுத்தாத சிறப்பு அம்சங்களை நிறுத்துங்கள் :
மடிக்கணினி : (LapTop)
BlurTooth,Wi-Fi போன்றவை சிறப்பான அம்சங்கள்தான் உங்கள் கணினிக்கு.ஆனால் இவை அதிகமான சக்தியை பயன்படுத்துகின்றன . தேவை இல்லாத நேரத்தில் இவற்றை நிறுத்தி வையுங்கள். இதனால் மின்கலத்தின் சக்தியை சேமிக்கலாம்.திரையின் செறிவையும் (Intensity) குறையுங்கள்.மேலும் DVD Drive மற்றும் USB Flash Drive ஆகியவற்றை பயன்படுத்தவில்லை என்றால்,அவற்றை முதலில் அகற்றுங்கள்.

அலைபேசி : (CellPhone)
திரையின் செறிவை நிறுத்துங்கள் அல்லது குறையுங்கள்.
எண்ணியல் படக்கருவி : (Digital Camera)
மின்கலத்தின் சக்தி குறைவாக இருக்கும்போது ,எடுக்க போகும் படத்தின் முன்னோட்டம் பார்க்க உதவும் LCD திரை வசதியை நிறுத்தி விடுங்கள்.மேலும் மின் விளக்கை(Flash) நிறுத்தி விடலாம் இது மேலும் பல படங்கள் எடுக்க உதவும்.

வன்தட்டை வாட்டதீர்கள் :
உங்கள் மடிக்கணினியில் அடிக்கடி வன்தட்டை வதைக்காதீர்கள்.வேண்டிய மட்டுமே பயன்படுத்துங்கள்.நீங்கள் Ipod அல்லது Mp3 player போன்ற சாதனங்கள் பயன்படுத்தினாலும் இது பொருந்தும்.ஒரு பாடலை next,previous மற்றும் shuffle போன்றவற்றில் மாற்றுவதற்கும் ப்ளய்ளிச்த் பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.Playlist நிறைய சக்தியை சேமிக்கும்.
சும்மா சும்மா ஆப் பண்ணாதீங்க:
நீங்கள் laptop,cellphone அல்லது Digital camera எதை பயன்படுத்தினாலும் .அதை அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்யாதீர்கள்.நாம் செல்போனை அவ்வளவாக ஆப்-ஆன் செய்யமாட்டோம். ஆனால் செல்போனில் கூட Offline அல்லது Airplane போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம் . மடிக்கணினியில் நிறைய பேர் செய்யும் தவறு இதுதான்.நீங்கள் ஒருதடவை ஆப் செய்து ஆன் செய்யும் போது,நிறைய மின்கல சக்தி வீணாகின்றது.இதற்கு பதில் Hiberanate தேர்ந்தெடுங்கள்.

ஒவ்வொரு புகைப்படம் எடுத்த பிறகும் உங்கள் காமெராவை ஆப் செய்து விடாதீர்கள்.அதற்கு பதில் LCD திரையை ஆப் செய்து ஆன் செய்யுங்கள்.
இது போன்ற சின்ன சின்ன மின்கல சக்தியை சேமிக்கும் முறைகளை செய்து,
நமது மின்கலத்தை நீடித்து உழைக்க வைக்கலாம்.
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

10 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Thursday 1 October, 2009

Firefox's New King Tab - அசத்தலான புதிய டேப் வசதி

நீங்கள் FireFox பயன்படுத்துபவரா ? இதோ உங்களுக்கான ஒரு பயனுள்ள நீட்சி.நீங்கள் ஒவ்வொரு தடவை Ctrl + T அல்லது File + New Tab தேர்வு செய்யும்போது ,புதிய டேப் ஒன்று திறக்கும் காலியாக.இதுவே நமக்கு ஒரு தேவையான சில விடயங்களை கொண்டிருந்தால் எப்படி இருக்கும்.? அத்தகைய சிறப்பு கொண்டதுதான் FireFox-இன் New King Tab.

இந்த நீட்சியை உங்கள் FireFox உடன் உடன் இணைக்க இங்கே அழுத்தவும்.
இணைத்தபின் Restart செய்து New tab செல்லுங்கள்.உங்கள் விருப்பதிற்கேற்ப மாற்ற வலது மேல்பக்க மூலையில் உள்ள Options பட்டனை சொடுக்குங்கள்.

இதன் சிறப்பு அம்சங்கள் :
1.ShortCuts
நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் ShortCut உருவாக்கலாம்.ஒரு இணையதளத்திற்கோ இல்லை உங்கள் கணினியில் பதிந்துள்ள ஏதேனும் ஒரு மென்பொருளுக்கோ கொடுக்கலாம்.(Notepad,Skype,Media Player etc)

2.Most Used Sites
நாம் அதிகம் பார்த்த இணையதளங்கள் வரிசைபடுதபட்டிருக்கும்

3.Recently Closed Tabs
நாம் அண்மையில் மூடிய டேப்களை பார்க்கலாம்
4. Suggested Sites
நாம் இணையத்தில் உலவுவதை பொறுத்து சில தளங்கள் பரிந்துரைக்கப்படும்.

5.BackGround
நாம் விரும்பிய படங்களை பின்புலமாக தேர்தெடுக்கலாம்.
6.Customize Your Name:
உங்கள் பெயரை டேபுக்கு கொடுத்திடுங்கள்.
7.Boss Mode:
நீங்கள் வேலை செய்பவரா ? உங்களுக்கான வசதிதான் இது.
இந்த நீட்சியை பயன்படுத்தி பாருங்கள்..வித்தியாசத்தை உணருங்கள்.Have Fun :)

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Firefox's New King Tab - அசத்தலான புதிய டேப் வசதிSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

3 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS
 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved