Monday 23 November, 2009

பதிவின் முகவரியை பதிவை பற்றி தகவல் தரும் முகவரியாக மாற்றுவது எப்படி ?


இது வலைபதிவர்களுக்கான பதிவு.புதிய பதிவுகளை இடும்போது அதன் தலைப்பு தமிழில் இருப்பதால் ,பதிவின் நிரலி http://gramathan.blogspot.com/2009/11/blog-post.html  
இப்படி இருக்கும்.இந்த நிரலில் பதிவை பற்றி எந்த தகவலும் இல்லை.இது எனது முந்தைய பதிவின் முகவரி
மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர். 


 இதே பதிவின் முகவரி இப்படி இருந்தால்...
http://gramathan.blogspot.com/2009/11/comupter-thinks-like-brain.html  

இந்த முகவரியில் பதிவை பற்றி தகவல்கள் இருகின்றது.இதை போல் நாமும் பதிவிடும்போது , பதிவின் முகவரியில் பதிவை பற்றி தகவல் தரலாம்.

நீங்கள் பதிவிடும்போது முதலில் ஆங்கிலத்தில் சிறியதாக பதிவின் பொருள் வரும்படி
தலைப்பிட்டு பதிவிடுங்கள்.இப்போது உங்கள் பதிவின் முகவரி பதிவை பற்றி தகவலோடு இருக்கும்.இப்போது பதிவை எடிட் செய்து தலைப்பை தமிழில் மாற்றி விடுங்கள்.அவ்வளவுதான்.  Have Fun :)

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This பதிவின் முகவரியை பதிவை பற்றி தகவல் தரும் முகவரியாக மாற்றுவது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

13 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Friday 20 November, 2009

மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்



பல ஆண்டுகளாக மூளை எப்படி சிந்தின்கின்றது என்பது பற்றி  ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.இதன் நோக்கம் மூளையைபோல் சிந்திக்கும்  இயந்திரத்தை உருவாக்குவது.அதற்காக படிகளாக முதலில் எலியின் மூளையை போல் சிந்திக்ககூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றினை உருவாக்கினர்.

இவ்வரிசையில் பூனையின் மூளையை போல் சிந்திக்க கூடிய சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை தற்போது IBM நிறுவனம் உருவாக்கி உள்ளது.இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1Terabyte(TB) = 1024  GB)) நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.

இவ்வளவு சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர் பூனையின் மூளையை விட நூறு மடங்கு குறைவான வேகத்திலே யோசிக்கின்றது.ஆனாலும் இத்துறையில் பெரும் முன்னேற்றம் என்று கூறுகின்றனர்.இதற்கே இவ்வளவு சக்தி வாய்த்த கணினி என்றால், மனித மூளைக்கு நிகரான சிந்திக்கும் திறனை கொண்ட கணினியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என நினைத்து பாருங்கள்.இதுவரை 1% மட்டுமே மனித மூளையை போல சிந்திக்கும் சூப்பர் கம்ப்யூட்டர் உள்ளது . ஆனாலும் ஒரு நாள் வரலாம்...


(மூளை  ஒரு சிக்கலான இணைப்பு அதிலுள்ள  நூறு  கோடி நியூரான்  மற்றும் அதை இணைக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது .இதில் மூளையில் சிந்திக்கும் பகுதியை Cerebral Cortex என்று அழைகின்றனர். )
 நன்றி : Times of India
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This மூளையை போல் சிந்தித்து செயல்படும் சூப்பர் கம்ப்யூட்டர்SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Tuesday 17 November, 2009

MozBackup - Firefox உலவியை Backup மற்றும் Restore செய்ய இலகுவான இலவச மென்பொருள்

Firefox உலவியை Backup செய்ய ஒரு இலகுவான இலவச மென்பொருள் .இதன் மூலம் Bookmarks, Passwords, Extensions, Themes போன்றவற்றை சுலபமாக Backup செய்யலாம்.  வேண்டியபொழுது Restore செய்து கொள்ளலாம்.கீழகண்ட முகவரிக்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.இதனை நிறுவத் தேவை இல்லை.  


தரவிறக்கி Unzip செய்து மென்பொருளை இயக்குங்கள்.Firefox உலவியின் இயக்கத்தை   நிறுத்தி விட்டு முயற்சி செய்யுங்கள்.


Next பட்டனை கிளிக் செய்யுங்கள்...

 கீழ்கண்டவாறு தகவல் வந்தால் .FireFox இன்னும் இயங்கி கொண்டிருக்கின்றது என்று பொருள் ஆதலால் அதனை முதலில் நிறுத்துங்கள்.



மேற்கூறிய தகவல் வரவில்லை என்றால் அடுத்த படிக்கு செல்லுங்கள்.
 

கோப்பை சேமிக்கும்  பாதையை தேர்வு செய்யுங்கள்

Next பட்டனை கிளிக் செய்யுங்கள்.Backup செய்யும் கோப்பினை கடவுச்சொல் கொண்டு பாதுகாக்க விரும்பினால் Yes தேர்வு செய்யுங்கள்.



Yes தேர்வு செய்திருந்தால் கடவுச்சொல்லை தட்டச்சுங்கள்.


எவற்றையெல்லாம் Backup செய்ய வேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள்.


Next பட்டனை கிளிக் செய்யுங்கள்.
 

அவ்வளவுதான்.Have Fun :)
இம்மென்பொருள் மூலம் கீழ்கண்ட உலாவிகளையும் Backup செய்யலாம்.

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This MozBackup - Firefox உலவியை Backup மற்றும் Restore செய்ய இலகுவான இலவச மென்பொருள்SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

2 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Tuesday 10 November, 2009

Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்


 வணக்கம் நண்பர்களே,
இலவச மென்பொருள்களில் மிகவும் பாதுக்காப்பான,இலகுவான மற்றும் எளிமையான, நன்றாக வேலைசெய்யக்கூடிய பல பயனுள்ள மென்பொருள்களை இணையத்தில் பார்த்து, பயன்படுத்தியதை இங்கே உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறேன்.
அவ்வரிசையில் மேலும் ஒரு சிறப்பான இலவச மென்பொருள்தான் Gsplit 3.0. பெரிய கோப்புகளை , சிறு சிறு துண்டுகளாக பிரிக்க உதவுகின்றது.


இதற்கு முன் ,Winrar பயன்படுத்தி பெரிய கோப்புகளை ,சிறு துண்டுகளாக பிரித்து வந்தேன்.சிறிய கோப்புகளை பிரிக்கும்போது எந்த பிரச்னையும் இல்லை.ஆனால் ஒருசமயம் 3GB உள்ள கோப்பினை பிரிக்கும்படி வந்தது,அப்போது Winrar  எடுத்து கொண்ட நேரம் ஒன்றரை  மணி நேரத்திற்கு மேல்...அதே கோப்பினை பிரிக்க Gsplit எடுத்துக்கொண்ட நேரம் 90 நொடிகள் மட்டுமே. ஏறக்குறைய 50 மடங்கு வேகமாக Gsplit செயல்படுகின்றது.(Winrar -ஐ விட).இந்த இலவச மென்பொருளை நிறுவத் தேவை இல்லை.உங்களுக்கு வேண்டியவாறு தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.


மென்பொருளை தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இந்த மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்று விளக்கி உள்ளேன். பிரித்த கோப்பினை இணைக்க அதிலயே ஒரு .exe உருவாக்கப்படும்.அதை கிளிக் செய்தால் போதும் ,மீண்டும் பிரித்த கோப்புகள் தானாகவே இணைந்து விடும் .


அதன் முகப்பு :
  1. பிரிக்கும் முறை 1 (Normal)
  2. பிரிக்கும் முறை 2 (Express)

பிரிக்கும் முறை 1 (Normal):
படிகள் :

படி 1 :
கோப்பினை தேர்வு செய்யுங்கள்...


படி 2:
பிரித்த கோப்பினை சேமிக்க வேண்டிய இடத்தினை தேர்வு செய்யுங்கள்...

படி 3:
 எவ்வளவு KB ,MB or GB என்பதனை தேர்வு செய்யுங்கள்.




 
அல்லது Predefined பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்யுங்கள் .


படி 4:
பிரிக்கும் வேகத்தை தேர்வு செய்யுங்கள்... 


 இப்பொழுது Split பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்.Have Fun :)


2.பிரிக்கும் முறை 2 (Express) :
 Express  என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்...




Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Gsplit - கோப்புகளை பிரிக்க அதிவேகமான இலவச மென்பொருள்SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

5 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Friday 6 November, 2009

CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்து கொள்ள இலவச மென்பொருள்



வணக்கம் நண்பர்களே,
அண்மையில் நான் பயன்படுத்தும் கணினியில் , அதிகசக்திவாய்ந்த மென்பொருளை
நிறுவ வேண்டியிருந்தது. ஆனால் எனது கணினியின் நினைவகம் (RAM) குறைவாக இருந்ததால் மென்பொருளை நிறுவ முடியவில்லை. கணினியில் உள்ள வன்பொருளை பற்றி தெரிந்தது கொள்ள விண்டோஸ் இயங்குதளத்தில் வழிமுறைகள் இருந்தாலும் அது போதுமானதாக இல்லை.

கொஞ்ச நஞ்சம் மென்பொருளை பற்றி தெரிந்திருந்தாலும் ,வன்பொருளை பற்றி
அவ்வளாக தெரிந்தது கொள்ள நாம் விரும்புவதில்லை.அதெல்லாம் வன்பொருள் நிர்வாகியின் வேலை என்று விட்டுவிடுவோம்.நானும் அப்படித்தான் இருந்தேன்.இந்த பிரச்சனையால் அந்த அவசியம் ஏற்பட்டது.இணையத்தில் தேடிய போது CPUZ நிறுவனம் இதற்கு ஒரு எளிமையான ,மிகவும் இலகுவான இலவச மென்பொருளை உருவாக்கியுள்ளது.

கணினியை (CPU) திறந்து பார்க்காமலே ,வன்பொருள் பற்றி மிக பயனுள்ள தகல்களை பெறலாம்.உதாரணமாக கணினியில் நினைவகத்திற்கு (RAM) என்று ஒதுக்கப்பட்ட Slots
எத்தனை என்பதையும் அதில் உள்ள RAM பற்றி விவரங்களையும் அறியலாம்.இந்த மென்பொருளை நிறுவத்தேவையில்லை.

தரவிறக்கி Unzip செய்து கொள்ளுங்கள்.இப்போது cpuz.exe என்பதனை டபுள் கிளிக் செய்திடுங்கள்.அவ்வளவுதான்.Have Fun :)



சில நொடிகளில் ,உங்கள் கணினியின் வன்பொருளை பற்றி  அனைத்து விவரமும்...
இதில் CPU,Caches,Mainboard,Memory,SPD,Graphics போன்றவற்றின் தகவல்களை காணலாம்.பயன்படுத்தி பாருங்கள்.இனி நீங்களும் ஒரு குட்டி வன்பொருள் நிர்வாகி... 
CPU :

  SPD:

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This CPUZ - கணினியின் வன்பொருளை பற்றி தெரிந்து கொள்ள இலவச மென்பொருள்SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

3 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Thursday 5 November, 2009

Firefox's Hide Menubar - அசத்தலான பயனுள்ள நீட்சி...


வணக்கம் நண்பர்களே,
நமக்கு எப்பொழுதும் FireFox-இன் மெனு தேவைப்படுவதில்லை.இதனை சுலபமாக மறைக்கலாம்.தேவைப்படும் போது மீண்டும் பயன்படுத்தலாம்.கீழ்கண்ட நீட்சியை நிறுவினால் போதும்.



உங்கள் தற்போதைய மெனு :



நீட்சியை நிறுவிய பின் ,மெனு  மறைக்கப்பட்டுள்ளது ,மீண்டும் மெனுவை பயன்படுத்த F10 பயன்படுத்தவும்.பின்பு அது தானாகவே மறைந்துவிடும்.

மெனு மறைக்கப்பட்டுள்ளது :


Have Fun :)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Firefox's Hide Menubar - அசத்தலான பயனுள்ள நீட்சி...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Tuesday 3 November, 2009

MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள்


வணக்கம் நண்பர்களே,
நமது கோப்புகளை நகலாக்கி சேமிக்க விண்டோசில் கோடா நிலையில் உள்ள Ctrl + C மற்றும் Ctrl + V பயன்படுத்துவோம்.இது நமது கணினியில் உள்ள கோப்புகளை பிரதி எடுக்க உதவுகின்றது.இதுவே பிணையத்தில் உள்ள மற்ற கணினிகளில் இருந்து பிரதி எடுக்கும்போது இது மிகவும் மந்தமாக செயல்படும்.நமது பிணையத்தில் எதாவது பிரச்னை என்றால்இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும்.இந்த மாதிரி சமயங்களில் நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட மென்பொருள்தான் MicroSoft's RichCopy. இது ஒரு இலவச மென்பொருள்.இதை ஏனோ மைக்ரோசாப்ட் தனது இயங்குதளங்களில் இந்த வசதியை இணைக்கவில்லை. கோப்புகளை பிரதி எடுக்க ஒரு சிறந்த மென்பொருளான இதனை எப்படி நமது கணினியில் தரவிறக்கி நிறுவுவது எப்படி என்று கீழே படங்களுடன் விளக்கி உள்ளேன்.  

 இது ஒரு Self Extractor. இதனை தரவிறக்கிய பின்,டபுள் கிளிக் செய்து சேமியுங்கள்.

உங்களுக்கு வேண்டிய இடத்தில் கோப்புகளை சேமியுங்கள்.


 
இப்போது அந்த உறையில் (Folder) நுழைந்து ,setup.exe என்பதனை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவுதான் RichCopy-ஐ கணினியில் பதிந்து விட்டீர்கள்.இப்போது அதனை எப்படி பயன்படுத்துவது  என்று  பார்போம் .

அதன் முகப்பு :

பிரதி எடுக்க வேண்டிய கோப்பின் மூலத்தையும் ,பிரதி எடுக்க படவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள்.

தேர்வு செய்த பின் Start Copy என்ற பட்டனை சொடுக்குங்கள். 
 
  கோப்புகள் பிரதி எடுக்கப்படுகின்றது:

பிரதி எடுப்பது நிறைவடைந்தது :
 

விரும்பியவற்றை தேர்ந்தெடுக்க Option என்பதனை சொடுக்குங்கள்.

Have Fun :)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள்SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

3 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS
 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved