
அட என்னங்க இது என்கிறீர்களா ?
ஒரு வலைத்தளத்திற்கு நாம் செல்வோமேயானால் ,அத்தளத்தை பற்றி கருத்துக்களை அவர்கள் தளத்தில் தான் பதிவு செய்ய முடியும்.ஆனால் sidewiki மூலம் நாம் எந்த தளத்தை பற்றியும் நம் கருத்தை பதிவு செய்ய முடியும்.
இதனால் என்ன பயன் ?ஒரு வலைத்தளத்தை பற்றி மற்றவர்களின் கருத்தை தெரிந்து கொள்வதன் மூலம்,அத்தளத்தை பற்றி உண்மையான தகவல் நமக்கு கிடைக்கின்றது.மேலும் நமக்கு வேண்டிய விடயம் தளத்தில் கிடைக்குமா இல்லையா என்பதும் தெரியவருகின்றது.அதனுடைய நம்பகத்தன்மை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
நம் கருத்தை எப்படி பதிவு செய்வது ?Google Sidewiki என்ற முகவரிக்கு சென்று ,உங்கள் FireFox அல்லது Internet Explorer உடன் இணைத்து கொள்ளுங்கள்.
http://www.google.com/sidewikiPicasa 3.5

இலவசமாக நமது புகைபடங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருளான பிகாசா,அதன் அடுத்த பதிவான பிகாசா 3.5 அறிமுகபடுத்தியுள்ளது.இதன் தரவிறக்க சுட்டி Picasa 3.5.இதற்கு தேவையான இயங்குதளம் விண்டோஸ் XP/VISTA/7.
உங்கள் செல்போன் வழங்கிகளை மாற்றலாம் நம்பரை மாற்றாமலே:
இனி நாம் எந்த செல்போன் வழங்கிகளையும் நம்பரை மாற்றாமல் இருப்பதற்காக சகித்து கொண்டு இருக்கத் தேவையில்லை.பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்றை மாற்றி கொள்ளலாம்.
இதோ ,அதோ என தப்பித்து வந்த செல்போன் வழங்கிகள்,இனி நம்மை ஏமாற்ற முடியாது.இரண்டு முறை காலக்கெடுவை தவறியவர்கள் இம்முறை ,கண்டிப்பாக இத்திட்டத்தை செயல் படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பெருநகரங்களில் திட்டம் அமலுக்கு வருகின்றது. 2010 ,மார்ச் 20 ஆம் தேதி முதல் நாடெங்கிலும் அமலுக்கு வருகின்றது.Airtel வேண்டாமா,Vodafone இருக்குது அதுவும் வேண்டாமா Aircel, இல்லை டோகோமோ ,இல்லை ரிலையன்ஸ் இல்லை bsnl.
Have Fun:)ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்தியா...



