Showing posts with label tips. Show all posts
Showing posts with label tips. Show all posts
Friday, 20 August 2010
FireFox Personas
இணையத்தில் உலவ பல உலாவிகள் இருந்தாலும் , எனக்கு மிகவும் பிடித்தது firefox மட்டும்தான் .இதன் வளர்ச்சி அபாரமானது, அண்மையில் Firefox 4 Beta வெளியானதை அறிவோம்.மென்மேலும் வளர்ந்து, உலவிகளில் அதிகம் பயன்படுத்தும் உலாவியாகும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.இதன் சிறப்பே , நமக்கு வேண்டிய நீட்சிகளை நிறுவிக்கொள்ளலாம்.அவ்வரிசையில் மேலும் ஒரு அற்புதமான நீட்சி...
Firefox Theme பற்றி நாம் அறிந்ததே.Firefox -இன் தோற்றத்தை மிக அழகாக மாற்ற உதவும். ஆனால் வேண்டிய தீம்களை எல்லாம் தரவிறக்க வெகு நேரம் எடுக்கும், நேரமும் விரயமாகும்.தேவையில்லாத தீம்களை நீக்க வேண்டும்.இப்பிரச்சனைகளை தவிர்க்க ,Personas நமக்கு உதவுகின்றது.
இந்த நீட்சியை ஒருமுறை நிறுவி கொண்டால் போதும் ,Firefox -இன் தோற்றத்தை மிக எளிமையாக மாற்றலாம்.நீட்சியை நிறுவ கீழே சொடுக்கவும்...
நிறுவிய பின்னர், Firefox -இன் கீழே இடது மூலையில் ,நரி படத்தை கிளிக் செய்யுங்கள்,இப்போது நீங்கள் விரும்பிய தோற்றத்தை கொண்டு வரலாம் நொடி நேரத்திலயே...!
|
|
FireFox Personas |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Monday, 16 August 2010
Gmail's Default Text Style
வணக்கம் நண்பர்களே ,
நீண்ட நாளாக பதிவிடவில்லை என்றாலும் , அவ்வபோது வந்துச்சென்ற நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இனி...
நாம் தினமும் பயன்படுத்தும் Gmail-ல் வசதிகள் மேலும் மேலும் மேம்படுத்தபடுகின்றது. அவற்றில் சில எளிமையான வசதிகளை பற்றி பார்போம்.
புதியதாக மின்னஞ்சலை அனுப்பும்போது அதனை ஒவ்வொரு முறையும் Format செய்து அனுப்புவோம்.மீண்டும் ஒரு மின்னஞ்சலை அனுப்பும்போது,திரும்ப Format செய்ய நேரும்,இதனை தவிர்க்க ஜிமெயில் Default Text Style எனும் வசதியை தருகின்றது.
நாம் அதிகம் பயன்படுத்தும் Format எதுவோ அதனை ஒரு முறை மாற்றி அமைத்தால் போதும், புதிய மின்னஞ்சல்களை உருவாக்கும்போது நாம் சேமித்து வைத்த Format தேர்வு செய்யப்பட்டிருக்கும்.
இந்த வசதியை பெற :
இந்த வசதியை நீக்க :
|
|
Gmail's Default Text Style |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Monday, 5 October 2009
உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?

நம் வாழ்க்கையில டிஜிட்டல் சாதனங்களின் பங்கு இன்றியமையாதது.அவற்றில் பல மின்கலம் (Battery) மூலமே இயங்குகின்றது.மின்னேற்றி மூலம் மின்கலத்தின் சக்தியை தினமும் கூட்டுவோம்.ஆனால் எந்நேரமும் மின்னேற்றி (Charger) வைத்திருப்போம் என்று கூற முடியாது.மின்னேற்றி வைத்திருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத நிலை வரலாம். இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு நேர்ந்தால் எப்படி சமாளிப்பது ?
நாம் பயன்படுத்தும் மின்கல சாதனங்களை எப்படி ஆற்றல்மிக்கதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
வெப்பத்தை தவிருங்கள் :
நீங்கள் எந்த வகை மின்கல சாதனங்களை பயன்படுத்தினாலும் அதை தேவை படும்போது மட்டுமே அதனை உறைகளில் இருந்து வெளியே எடுங்கள்.மற்ற நேரங்களில் அதை பாதுகாப்பாக அதற்கான உறையிலே வைத்திருங்கள்.வெப்பம்தான் மின்கலத்தின் முதல் எதிரி , நீங்கள் மடிக்கணினியை பயன்படுத்தாமல் வெளிய வைத்திருந்தால்,வெளிவெப்பம் ஊடுருவி மின்கலத்தில் வேதியல் மாற்றங்கள் நிகழும்.இதனால் மின்கலத்தின் சக்தி வீணாகும். நீங்கள் மின்கலத்தை குளுமையாக வைத்திருந்தால் ,மின்கலம் நீடித்து உழைக்கும்.நினைவில் கொள்ளுங்கள் .
பயன்படுத்தாத சிறப்பு அம்சங்களை நிறுத்துங்கள் :
மடிக்கணினி : (LapTop)
BlurTooth,Wi-Fi போன்றவை சிறப்பான அம்சங்கள்தான் உங்கள் கணினிக்கு.ஆனால் இவை அதிகமான சக்தியை பயன்படுத்துகின்றன . தேவை இல்லாத நேரத்தில் இவற்றை நிறுத்தி வையுங்கள். இதனால் மின்கலத்தின் சக்தியை சேமிக்கலாம்.திரையின் செறிவையும் (Intensity) குறையுங்கள்.மேலும் DVD Drive மற்றும் USB Flash Drive ஆகியவற்றை பயன்படுத்தவில்லை என்றால்,அவற்றை முதலில் அகற்றுங்கள்.
அலைபேசி : (CellPhone)
திரையின் செறிவை நிறுத்துங்கள் அல்லது குறையுங்கள்.
எண்ணியல் படக்கருவி : (Digital Camera)மின்கலத்தின் சக்தி குறைவாக இருக்கும்போது ,எடுக்க போகும் படத்தின் முன்னோட்டம் பார்க்க உதவும் LCD திரை வசதியை நிறுத்தி விடுங்கள்.மேலும் மின் விளக்கை(Flash) நிறுத்தி விடலாம் இது மேலும் பல படங்கள் எடுக்க உதவும்.
வன்தட்டை வாட்டதீர்கள் :
உங்கள் மடிக்கணினியில் அடிக்கடி வன்தட்டை வதைக்காதீர்கள்.வேண்டிய மட்டுமே பயன்படுத்துங்கள்.நீங்கள் Ipod அல்லது Mp3 player போன்ற சாதனங்கள் பயன்படுத்தினாலும் இது பொருந்தும்.ஒரு பாடலை next,previous மற்றும் shuffle போன்றவற்றில் மாற்றுவதற்கும் ப்ளய்ளிச்த் பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.Playlist நிறைய சக்தியை சேமிக்கும்.
சும்மா சும்மா ஆப் பண்ணாதீங்க:நீங்கள் laptop,cellphone அல்லது Digital camera எதை பயன்படுத்தினாலும் .அதை அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்யாதீர்கள்.நாம் செல்போனை அவ்வளவாக ஆப்-ஆன் செய்யமாட்டோம். ஆனால் செல்போனில் கூட Offline அல்லது Airplane போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம் . மடிக்கணினியில் நிறைய பேர் செய்யும் தவறு இதுதான்.நீங்கள் ஒருதடவை ஆப் செய்து ஆன் செய்யும் போது,நிறைய மின்கல சக்தி வீணாகின்றது.இதற்கு பதில் Hiberanate தேர்ந்தெடுங்கள்.
ஒவ்வொரு புகைப்படம் எடுத்த பிறகும் உங்கள் காமெராவை ஆப் செய்து விடாதீர்கள்.அதற்கு பதில் LCD திரையை ஆப் செய்து ஆன் செய்யுங்கள்.
இது போன்ற சின்ன சின்ன மின்கல சக்தியை சேமிக்கும் முறைகளை செய்து,நமது மின்கலத்தை நீடித்து உழைக்க வைக்கலாம்.
|
|
உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி? |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Thursday, 18 June 2009
Skydrive - Online Microsoft Storage
நம் எல்லோருக்கும் தெரியும் Hotmail என்பது Microsoft நிறுவனத்தின் இலவச மின்னஞ்சல் சேவை .நம்மில் பலருக்கு SkyDrive பற்றி தெரியாது .
SkyDrive என்பது Microsoft வழங்கும் இலவச கோப்பு சேமிக்கும் சேவை .
அதாவது நம் புகைப்படங்கள் ,பாடல்கள் ,கோப்புகள் நீங்கள் SkyDrive-இல்
சேமிக்கலாம். அதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் .
SkyDrive- இன் சிறப்பு:
எங்கிருந்தாலும் , கோப்புகளை நம்மால் Download செய்து கொள்ள முடியும்.
25 GB வரை நாம் கோப்புகளை சேமிக்கலாம் .அதிக பட்சமாக ஒரு கோப்பு
50 mb வரை இருக்கலாம்.பாதுகாப்பும் மிக அதிகம்.
சுருக்கமாக சொன்னால் ,File Hosting Service ஒரு மாற்று.
இந்த சேவையை பெற நமக்கு வேண்டியது ஒரு Hotmail account.

Skydrive - Online Microsoft Storage |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Wednesday, 17 June 2009
வலை பக்கங்களில் தமிழில் டைப் செய்வது எப்படி?
கூகுள் நமக்கு அந்த சேவையை இலவசமாக வழங்குகிறது
இதன் மூலம் நாம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும் .
இனி எங்கேயும் எதிலேயும் தமிழ் தான்.
இங்கே கிளிக் செய்து அதன் வழிமுறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .
இதன் மூலம் நாம் எளிதாக தமிழில் டைப் செய்ய முடியும் .
இனி எங்கேயும் எதிலேயும் தமிழ் தான்.
இங்கே கிளிக் செய்து அதன் வழிமுறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .
|
|
வலை பக்கங்களில் தமிழில் டைப் செய்வது எப்படி? |
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Subscribe to:
Posts (Atom)