Tuesday, 27 October 2009

Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0



வணக்கம் நண்பர்களே,

துண்டாக்கல் (Fragmentation) என்றால் என்ன ?
வன்தட்டில் கோப்புகளை சேமிக்கும் போது,கோப்புகள் ஒரே இடத்தில் சேமிக்கபடுவதில்லை.வன்தட்டில் காலியாக உள்ள இடத்தில்,கோப்புகள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு சேமிக்கப்படும்.எந்த வகை கோப்புகள் ஆனாலும் ,அதன் அளவு எவ்வளவு பெரிதாயினும் இவ்வாறே சேமிக்கப்படும்.

ஏன் Defragmentation செய்ய வேண்டும் ?
வன்தட்டில் சேமித்த கோப்புகளை ,நாம் பயன்படுத்தும்போது ,கணினி ஆங்காங்கே
சேமிக்கபட்ட துண்டுகளை ஒன்றாக்கி கோப்புகளாக தரும். சிறிய கோப்புகளாக இருந்தால் ,கணினியினின் வேகம் குறைவது நமக்கு தெரிவதில்லை.இதுவே சற்று பெரிய கோப்புகளாக இருந்தால் ,அதனை ஒரு முழுமையான கோப்பாக மாற்ற கணினி நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.இப்பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு.

எப்படி Defragmentation செய்வது ?
இப்படி ஒவ்வொரு முறையும் நமது நேரத்தையும் ,கணினியின் ஆற்றலை குறைக்கும் இப்பிரச்சனைக்கு Defragemnt செய்வதுதான் ஒரே வழி.
Goto My Computer .Right Click -> Manage -> Disk Defragmenter


இந்த முறையில் நமது வன்தட்டில் பிரிக்கபட்ட பிரிவுகளான (C,D,E etc.,) போன்றவற்றை defragment செய்ய இயலும் .ஆனால் ஒரு File அல்லது Folder இதில் Defragment செய்ய முடியாது.

Power Defragmenter 3.0 :(Portable)

நமது கணினியின் வன்தட்டை Defragment செய்ய சிறந்த இலவசமான மென்மொருள் தான் Power Defragmenter 3.0. இதன் மூலம் நாம் ஒரு File அல்லது Folder defragment செய்து கொள்ளலாம் .மிகவும் இலகுவான மென்பொருளான இது பயன்படுவதற்கும் எளியது.
இது மைக்ரோசாப்டின் Config என்னும் மென்பொருளை அடிபடையாக கொண்டு இயங்குகின்றது.இதனை கணினியில் பதிய வேண்டிய அவசியம் இல்லை.


தரவிறக்கி PowerDefragmenter.exe டபுள் கிளிக் செய்தால் கீழ்கண்டவாறு காண்பிக்கும்.இங்கே
Yes கிளிக் செய்யவும். 

இப்போது மைக்ரோசாப்டின் CONFIG மென்பொருளை அது தானாகவே தரவிறக்கம் செய்து கொள்ளும் .


இப்போது நாம் மென்பொருளை பயன்படுத்த தயார்.Next கிளிக் செய்யவும்



உங்களுக்கு வேண்டியவற்றை தேர்வு செய்யலாம்.


Files:

Folders:

Partitions(C,D,E etc.,):


Defragmention in Action :


 
அவ்வளவுதான். Have Fun :)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Defragmentation செய்ய இலவச மென்பொருள் - Power Defragmenter 3.0SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday, 26 October 2009

Blogger-ன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர் - Blog Tips 1



வணக்கம் நண்பர்களே,
தமிழில் பதிவுகள் எழுதும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.மேலும் பல நண்பர்கள் இனிய தமிழில் பதிவு எழுத  முன்வர  வேண்டும் .மேலும் பல புதுமையான படைப்புக்கள் படைத்து  இணையத்திலும், தமிழினை இனிக்கச் செய்வோம்.

வலைபதிவர்களுக்கான சிறு சிறு குறிப்புகளை இந்த தொடர் பதிவில் எழுதுகிறேன்.பதிவு எழுதும் நண்பர்களுக்கு பயன் தரும் என்று நம்புகிறேன்.உங்களுக்கு பதிவில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் தயங்காமல் கேளுங்கள்.முடிந்தவரை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.நன்றி.
 
தினம் தினம் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் கூகுளின் மற்றுமோர் சேவை,Blogger-இன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர்.

இந்த சேவையை பெற :
  1. உங்கள் பிளாக்கர் கணக்கில் உள் நுழையுங்கள்.
  2. Settings கிளிக் செய்யுங்கள்.கீழ்கண்டவாறு தேர்வு செய்யுங்கள். 


      3.Save Settings கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான்.Have Fun :)

மேம்படுத்தப்பட்ட எடிட்டரின் புதிய வசதிகள்:

1.Preview: நீங்கள் இப்போது வலைத்தளத்தில் எப்படி உங்கள் பதிவு தோன்றுமோ.. அப்படியே பார்க்கலாம்.



  2.Increase Height :எடிட்டரின் உயரத்தை அதிகபடுத்தலாம்.எடிட்டரின் கீழ்  வலது மூலையில் மௌசால் இழுத்து உயரத்தை கூட்டலாம்.அகலத்தை கூட்ட முடியாது. 



3.Post Options :  பழைய எடிட்டரில் ,நீங்கள் பதிவை   எழுத ஆரம்பித்த நேரமே பதிவிடும் போதும் தெரியும்.அதை நாம்தான் மாற்ற வேண்டும் .இது மாற்றி அமைக்கபட்டுள்ளது.



4.அழகிய டூல்பார்:  




5.Add muliple Images :
இப்போது பதிவிற்கு வேண்டிய  படங்களை அனைத்தையும் தேர்வு செய்து விட்டு .வேண்டிய இடத்தில் இடம் பெறச் செய்யலாம்.




6.Image Bubble:படங்களை அளவினை இங்கேயே மாற்றலாம்.படத்தினை டபுள் கிளிக் செய்தால் போதும் ,வேண்டிய அளவினை தேர்வு செய்யலாம்.


Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Blogger-ன் மேம்படுத்தப்பட்ட எடிட்டர் - Blog Tips 1SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS
 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved