Tuesday, 3 November 2009

MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள்


வணக்கம் நண்பர்களே,
நமது கோப்புகளை நகலாக்கி சேமிக்க விண்டோசில் கோடா நிலையில் உள்ள Ctrl + C மற்றும் Ctrl + V பயன்படுத்துவோம்.இது நமது கணினியில் உள்ள கோப்புகளை பிரதி எடுக்க உதவுகின்றது.இதுவே பிணையத்தில் உள்ள மற்ற கணினிகளில் இருந்து பிரதி எடுக்கும்போது இது மிகவும் மந்தமாக செயல்படும்.நமது பிணையத்தில் எதாவது பிரச்னை என்றால்இன்னும் நிலைமை சிக்கலாகிவிடும்.இந்த மாதிரி சமயங்களில் நமக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட மென்பொருள்தான் MicroSoft's RichCopy. இது ஒரு இலவச மென்பொருள்.இதை ஏனோ மைக்ரோசாப்ட் தனது இயங்குதளங்களில் இந்த வசதியை இணைக்கவில்லை. கோப்புகளை பிரதி எடுக்க ஒரு சிறந்த மென்பொருளான இதனை எப்படி நமது கணினியில் தரவிறக்கி நிறுவுவது எப்படி என்று கீழே படங்களுடன் விளக்கி உள்ளேன்.  

 இது ஒரு Self Extractor. இதனை தரவிறக்கிய பின்,டபுள் கிளிக் செய்து சேமியுங்கள்.

உங்களுக்கு வேண்டிய இடத்தில் கோப்புகளை சேமியுங்கள்.


 
இப்போது அந்த உறையில் (Folder) நுழைந்து ,setup.exe என்பதனை கிளிக் செய்யுங்கள்.



அவ்வளவுதான் RichCopy-ஐ கணினியில் பதிந்து விட்டீர்கள்.இப்போது அதனை எப்படி பயன்படுத்துவது  என்று  பார்போம் .

அதன் முகப்பு :

பிரதி எடுக்க வேண்டிய கோப்பின் மூலத்தையும் ,பிரதி எடுக்க படவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள்.

தேர்வு செய்த பின் Start Copy என்ற பட்டனை சொடுக்குங்கள். 
 
  கோப்புகள் பிரதி எடுக்கப்படுகின்றது:

பிரதி எடுப்பது நிறைவடைந்தது :
 

விரும்பியவற்றை தேர்ந்தெடுக்க Option என்பதனை சொடுக்குங்கள்.

Have Fun :)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This MicroSoft's RichCopy - கோப்புகளை வேகமாக பிரதி எடுக்க இலவச மென்பொருள்SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

3 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Friday, 30 October 2009

Gmail மின்னஞ்சலில் படங்களை (Inline) நேரிடையாக இணைப்பது எப்படி ?



வணக்கம் நண்பர்களே, 
மின்னஞ்சல் சேவையில்  மிக வேகமாக வளர்ந்து வருகின்றது ஜிமெயில் .கூடிய விரைவில் எல்லா மின்னஞ்சல் சேவையையும் விட அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும். ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் இந்த அசுர வளர்ச்சி.இதன் முக்கிய அம்சம் எளிமை .எளிமையை தவிர வேறொன்றுமில்லை. ஜிமெயில் லேப்ஸ் மூலம் பல  புதிய  வசதிகளை கொடுக்கின்றது.அதில் ஒரு முக்கியமான சேவைதான் படங்களை மின்னஞ்சலுடன் இணைப்பது.பல பேருக்கு இந்த வசதி இருப்பது தெரியாது.மிகவும் பயனுள்ள வசதி இனி படங்களை Outlook போன்றவற்றை கொண்டு இணைக்காமல் நேரிடியாகவே இணைக்கலாம்.இனி Attachments தேவையில்லை.

இந்த வசதியை பெற : 
உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையுங்கள்.வலது மூலையில் உள்ள பச்சை குடுவை போல் உள்ள சிறிய படத்தினை கிளிக் செய்யுங்கள்.அல்லது Settings -> Labs தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். Have Fun :)



Inserting Images என்பதனை தேடி கீழே படத்தில் உள்ளது போல் தேர்வு செய்யுங்கள்.



இனி நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும்போது ,படங்களை இணைக்க இந்த பட்டனை சொடுக்கினால் போதும்.



Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Gmail மின்னஞ்சலில் படங்களை (Inline) நேரிடையாக இணைப்பது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS
 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved