வணக்கம் நண்பர்களே,
மின்னஞ்சல் சேவையில் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது ஜிமெயில் .கூடிய விரைவில் எல்லா மின்னஞ்சல் சேவையையும் விட அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும். ஆரம்பித்து ஐந்தே ஆண்டுகளில் இந்த அசுர வளர்ச்சி.இதன் முக்கிய அம்சம் எளிமை .எளிமையை தவிர வேறொன்றுமில்லை. ஜிமெயில் லேப்ஸ் மூலம் பல புதிய வசதிகளை கொடுக்கின்றது.அதில் ஒரு முக்கியமான சேவைதான் படங்களை மின்னஞ்சலுடன் இணைப்பது.பல பேருக்கு இந்த வசதி இருப்பது தெரியாது.மிகவும் பயனுள்ள வசதி இனி படங்களை Outlook போன்றவற்றை கொண்டு இணைக்காமல் நேரிடியாகவே இணைக்கலாம்.இனி Attachments தேவையில்லை.
இந்த வசதியை பெற :
உங்கள் ஜிமெயில் கணக்கில் உள் நுழையுங்கள்.வலது மூலையில் உள்ள பச்சை குடுவை போல் உள்ள சிறிய படத்தினை கிளிக் செய்யுங்கள்.அல்லது Settings -> Labs தேர்வு செய்யுங்கள். அவ்வளவுதான். Have Fun :)
Inserting Images என்பதனை தேடி கீழே படத்தில் உள்ளது போல் தேர்வு செய்யுங்கள்.
இனி நீங்கள் புதிய மின்னஞ்சலை உருவாக்கும்போது ,படங்களை இணைக்க இந்த பட்டனை சொடுக்கினால் போதும்.
4 கருத்துக்கள்:
பயனுள்ள தகவல்!
Dear Red maki, I am unable to see in my g mail what you have explained. let me know that clearly. I did not find any 'kuduvai" or Conical flask.
நன்றி வால்பையன்
கக்கு அண்ணே ,நீங்க
Settings ->labs
தேர்வு பண்ணுங்க.நன்றி அண்ணே தங்கள் தொடர் ஊக்கத்திற்கு.
Post a Comment