Monday 5 October, 2009

உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?


நம் வாழ்க்கையில டிஜிட்டல் சாதனங்களின் பங்கு இன்றியமையாதது.அவற்றில் பல மின்கலம் (Battery) மூலமே இயங்குகின்றது.மின்னேற்றி மூலம் மின்கலத்தின் சக்தியை தினமும் கூட்டுவோம்.ஆனால் எந்நேரமும் மின்னேற்றி (Charger) வைத்திருப்போம் என்று கூற முடியாது.மின்னேற்றி வைத்திருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத நிலை வரலாம். இது போன்ற பிரச்சனைகள் உங்களுக்கு நேர்ந்தால் எப்படி சமாளிப்பது ?

நாம் பயன்படுத்தும் மின்கல சாதனங்களை எப்படி ஆற்றல்மிக்கதாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

வெப்பத்தை தவிருங்கள் :
நீங்கள் எந்த வகை மின்கல சாதனங்களை பயன்படுத்தினாலும் அதை தேவை படும்போது மட்டுமே அதனை உறைகளில் இருந்து வெளியே எடுங்கள்.மற்ற நேரங்களில் அதை பாதுகாப்பாக அதற்கான உறையிலே வைத்திருங்கள்.
வெப்பம்தான் மின்கலத்தின் முதல் எதிரி , நீங்கள் மடிக்கணினியை பயன்படுத்தாமல் வெளிய வைத்திருந்தால்,வெளிவெப்பம் ஊடுருவி மின்கலத்தில் வேதியல் மாற்றங்கள் நிகழும்.இதனால் மின்கலத்தின் சக்தி வீணாகும். நீங்கள் மின்கலத்தை குளுமையாக வைத்திருந்தால் ,மின்கலம் நீடித்து உழைக்கும்.நினைவில் கொள்ளுங்கள் .

பயன்படுத்தாத சிறப்பு அம்சங்களை நிறுத்துங்கள் :
மடிக்கணினி : (LapTop)
BlurTooth,Wi-Fi போன்றவை சிறப்பான அம்சங்கள்தான் உங்கள் கணினிக்கு.ஆனால் இவை அதிகமான சக்தியை பயன்படுத்துகின்றன . தேவை இல்லாத நேரத்தில் இவற்றை நிறுத்தி வையுங்கள். இதனால் மின்கலத்தின் சக்தியை சேமிக்கலாம்.திரையின் செறிவையும் (Intensity) குறையுங்கள்.மேலும் DVD Drive மற்றும் USB Flash Drive ஆகியவற்றை பயன்படுத்தவில்லை என்றால்,அவற்றை முதலில் அகற்றுங்கள்.

அலைபேசி : (CellPhone)
திரையின் செறிவை நிறுத்துங்கள் அல்லது குறையுங்கள்.
எண்ணியல் படக்கருவி : (Digital Camera)
மின்கலத்தின் சக்தி குறைவாக இருக்கும்போது ,எடுக்க போகும் படத்தின் முன்னோட்டம் பார்க்க உதவும் LCD திரை வசதியை நிறுத்தி விடுங்கள்.மேலும் மின் விளக்கை(Flash) நிறுத்தி விடலாம் இது மேலும் பல படங்கள் எடுக்க உதவும்.

வன்தட்டை வாட்டதீர்கள் :
உங்கள் மடிக்கணினியில் அடிக்கடி வன்தட்டை வதைக்காதீர்கள்.வேண்டிய மட்டுமே பயன்படுத்துங்கள்.நீங்கள் Ipod அல்லது Mp3 player போன்ற சாதனங்கள் பயன்படுத்தினாலும் இது பொருந்தும்.ஒரு பாடலை next,previous மற்றும் shuffle போன்றவற்றில் மாற்றுவதற்கும் ப்ளய்ளிச்த் பயன்படுத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.Playlist நிறைய சக்தியை சேமிக்கும்.
சும்மா சும்மா ஆப் பண்ணாதீங்க:
நீங்கள் laptop,cellphone அல்லது Digital camera எதை பயன்படுத்தினாலும் .அதை அடிக்கடி ஆப் செய்து ஆன் செய்யாதீர்கள்.நாம் செல்போனை அவ்வளவாக ஆப்-ஆன் செய்யமாட்டோம். ஆனால் செல்போனில் கூட Offline அல்லது Airplane போன்றவற்றை தேர்ந்தெடுக்கலாம் . மடிக்கணினியில் நிறைய பேர் செய்யும் தவறு இதுதான்.நீங்கள் ஒருதடவை ஆப் செய்து ஆன் செய்யும் போது,நிறைய மின்கல சக்தி வீணாகின்றது.இதற்கு பதில் Hiberanate தேர்ந்தெடுங்கள்.

ஒவ்வொரு புகைப்படம் எடுத்த பிறகும் உங்கள் காமெராவை ஆப் செய்து விடாதீர்கள்.அதற்கு பதில் LCD திரையை ஆப் செய்து ஆன் செய்யுங்கள்.
இது போன்ற சின்ன சின்ன மின்கல சக்தியை சேமிக்கும் முறைகளை செய்து,
நமது மின்கலத்தை நீடித்து உழைக்க வைக்கலாம்.
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This உங்கள் LapTop,Cellphone,Digital Camera பேட்டரிகளை நீடித்து உழைக்கச் செய்வது எப்படி?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

10 கருத்துக்கள்:

Anonymous said...

Very good. Very good.
Very useful!

ரெட்மகி on 5 October 2009 at 2:05 pm said...

shirdi.saidasan@gmail.com said...

Very good. Very good.
Very useful!
//
நன்றி shirdi

Buஸூly on 5 October 2009 at 8:58 pm said...

useful information keep post

ரெட்மகி on 6 October 2009 at 12:44 pm said...

Buஸூly said...

useful information keep போஸ்ட்
//
நன்றி Buஸூly,தொடர்ந்து படியுங்கள்

முனைவர் இரா.குணசீலன் on 7 October 2009 at 11:25 am said...

நல்ல குறிப்புகள் நண்பரே

ரெட்மகி on 7 October 2009 at 11:38 am said...

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல குறிப்புகள் நண்பரே

//
நன்றி முனைவரே தங்கள் வருகைக்கும் ,பகிர்வுக்கும்...
தொடர்ந்து படியுங்கள்

ISR Selvakumar on 7 October 2009 at 1:33 pm said...

இன்றைய காலகட்டத்தில் அவசியமான பதிவு

ரெட்மகி on 8 October 2009 at 11:18 am said...

r.selvakkumar said...

இன்றைய காலகட்டத்தில் அவசியமான பதிவு

//
நன்றி செல்வக்குமார் அண்ணா,தங்கள் வருகைக்கு தொடர்ந்து படியுங்கள்...

யவனராணி on 31 October 2009 at 7:55 pm said...

அருமையான, மிகவும் உபயோகமான பதிவு.

நன்றி ரெட் மகி சார்.

ரெட்மகி on 2 November 2009 at 11:22 am said...

நன்றி யுவன ராணி.தொடர்ந்து படியுங்கள்.நானும் உங்கள் நண்பன்தான். சார் எல்லாம் வேண்டாமே.நண்பா என்றே சொல்லுங்கள்.

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved