Friday, 9 October 2009

Online Vista - 50-வது பதிவு - கவிதை


வணக்கம் நண்பர்களே.,
நீங்கள் 98,2k,XP போன்ற இயங்குதளங்களை பயன்படுத்துபவரா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.விஸ்டா பற்றி அறிந்திருப்பீர்கள் ஆனால் அதனை நம்மில் பலர் பயன்படுத்தி இருக்க மாட்டோம்.விஸ்டா இயங்குதளம் உண்மையில் எப்படி காட்சியளிக்கும் எனபது கூட பலருக்கு தெரியாது.கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி அந்த தளத்திற்கு செல்லுங்கள்...
விஸ்டா போன்ற ஒரு desktop இந்த தளம் வழங்குகிறது.இந்த தளம் முழுக்க மைக்ரோசாப்டின் Silverlight தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் நீங்கள் File Explorer,Internert Explorer,Windows Media Player,Notepad,Paint,Spider,Solitaire,Chess போன்ற சின்ன சின்ன வசதிகளை காணலாம்.நீங்கள் விஸ்டாவை பார்த்திருந்தாலும்,ஒரு தடவை இந்த தளம் போய் பாருங்க.Simply Amazing... Online Vista

கிராமத்து பையனின் 50-வது பதிவு :

நானெல்லாம் தமிழ் வலைபதிவர் ஆவேன் என்று ஒரு கணம் கூட சிந்தித்து கிடையாது. 2008 ஆம் ஆண்டு ஓரிரு பதிவுகள் ஆங்கிலத்தில் போட்டுளேன்.ஆனால் அப்போதெல்லாம் தமிழ் வலைத்தளங்கள் பற்றி ஒன்றும் தெரியாது.கடந்த ஜூன் மாதத்தில் அண்ணன் டிவிஎஸ்50 அவர்கள் எழுதும் வலைத்தளத்தை பற்றி ஆனந்த விகடன் வரவேற்பறையில் குறிபிட்டிருந்தார்கள்.மறுநாள் அவரது தளத்தை பார்த்து வியந்து போனேன். எளிய ,சீரிய நடை அத்தனையும் தொழில்நுட்ப பதிவுகள்.மிகவும் பயனுள்ள பதிவுகள்... அப்போதுதான் .ஏன் நாமும், நமக்கு தெரிந்த தொழில்நுட்ப செய்திகளை பதிவிட கூடாது என்று.அடுத்த நாளே ஆரம்பித்து விட்டேன்.

முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தது.(ஏன் என்றால் தொழில்நுப்ட வார்த்தைகள் ஒன்று கூட எனக்கு தமிழில் தெரியவில்லை.இப்போதும் அப்படிதான் :))ஆனால் சக தமிழ் வலைத்தளங்களை படித்து தமிழ் வார்த்தைகளை கற்றுக்கொண்டேன் .எனக்கு தட்டச்சவும் தெரியாது அதனால் பதிவு போட கொஞ்சம் சிரமம்(முதலில் தட்டச்ச கற்று கொள்ள வேண்டும்) .

இதோ கிராமத்து பையன் தளத்தை ஆரம்பித்து கிட்டத்தட்ட நாலு மாதங்கள் ஆகிவிட்டது.இதுநாள் வரை ஆதரவு அளித்து வந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் ,பின்னூட்டம் இட்டு உற்சாகபடுத்திய நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

என் தளத்தின் முதல் தொடர்பவராக சேர்ந்த அண்ணன் கக்கு மாணிக்கம் அவர்களுக்கும் மற்றும் தொடரும் அனைவருக்கும் நிரம்ப நன்றி.

ஈமெயில் மூலம் பதிவுகளை படிக்கும் நெஞ்சங்களுக்கும், ரீடரில் படிக்கும் நண்பர்களுக்கும் நன்றி.

இதுவரை தொழில்நுட்ப பதிவுகள் மட்டுமே எழுதி வந்த நான்,இனி மகி's கார்னர் தளத்தில் எழுதி வந்த கவிதைகளையும் இந்த தளத்திலேயே எழுதலாம்
(கணினி கனவுகளும்,காதல் நினைவுகளும்) என்று உள்ளேன். உங்கள் ஆலோசனைகளை கூறவும்...

என் பிறந்த நாளான இன்று 50-வது பதிவை இடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... மீண்டும் அனைவருக்கும் நன்றி


இன்று எனது பிறந்த நாள்...

எனக்கான பரிசு
உன்னிடமே
இருக்கின்றது
உன் பார்வை...

உனக்கான பரிசு
என்னிடமே
இருக்கின்றது
என் காதல்...

என்றுதான் கிடைக்கும் பரிசு
எனக்கும்...
உனக்கும்...

(ஒரு மீள் கவிதை)

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Online Vista - 50-வது பதிவு - கவிதைSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

14 கருத்துக்கள்:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) on 9 October 2009 at 1:53 pm said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மகி..........

கவிதை அருமை

தொடர்ந்து எழுதுங்கள்

ரெட்மகி on 9 October 2009 at 1:58 pm said...

@ உலவு

நன்றி உலவு.காம்

Thomas Ruban on 9 October 2009 at 3:10 pm said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

உங்களுடைய அனைத்து தொழில்நுட்ப பதிவுகளும் மிகவும் பயனுள்ள பதிவுகள் உங்களுடைய 50-வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்,தொடருங்கள்.


பதிவுக்கு நன்றி.

வால்பையன் on 9 October 2009 at 5:33 pm said...

பிறந்தநாள் மற்றும் 50 வது பதிவு வாழ்த்துக்கள்!

சூர்யா ௧ண்ணன் on 9 October 2009 at 5:45 pm said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

SAKTHI on 10 October 2009 at 1:13 am said...

eneya piranthanaal valthukkal

SAKTHI on 10 October 2009 at 1:14 am said...

eneya pirantha nal valthukkal!!!!

பொன் மாலை பொழுது on 10 October 2009 at 11:50 pm said...

அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகி,வாழ்க பல்லாண்டு.

எதேச்சையாக வே உங்கள் பதிவினை முதன்முதலின் வாசித்தேன் எளிமையும் அழகுற நீங்கள் தெழில் நுட்பங்களை விளக்கும் முறையும் பிடித்துப்போனது. உங்கள் 'வலைபூ ' சிறந்த தரமான ஒன்று. ஆர்பாடமிலாமல் அனாவசிய கூச்சல் இல்லாமல் நீங்கள் தரும் விஷயங்கள் அனைத்தும் எல்லோருக்கும் பயனுள்ளவை. தொடர்ந்து எழுதி மேலும் சிறப்படைவீர்கள். நலமே வாழ்க !!

அன்புடன்
கக்கு-மாணிக்கம்.

பொன் மாலை பொழுது on 11 October 2009 at 12:42 am said...

அன்புடன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகி,
ஐயும்பதாம் பதிவிற்கு வாழ்த்துக்கள். மேலும் நிறைய செய்திகளை எழுதி புகழ் பெற பாராட்டுக்கள்.
எளிமையும், அழகான விளக்கங்களும் உங்களின் பதிவுகளை மேன்மையுற செய்கின்றன.
ஆர்ப்பாட்டமும், கூச்சலும் இல்லாமல் நீங்கள் தரும் செய்திகள் அனைவருக்கும் பயன் தரக்கூடியவை. நன்றி மகி தம்பி.

ரெட்மகி on 12 October 2009 at 11:07 am said...

நன்றி Thomas Ruban
...
நன்றி வால்பையன்
அண்ணா
...
நன்றி சூர்யா ௧ண்ணன் அண்ணா
...
நன்றி SAKTHI
...
நன்றி கக்கு - மாணிக்கம் அண்ணா

cheena (சீனா) on 13 October 2009 at 2:42 am said...

அன்பின் மகி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

கவிதை அருமை - காதல் கவிதை அல்லவா

நாலே மாதங்களில் ஐம்பதாவது பதிவு - வேகத்திற்கும் வளர்ச்சிக்கும் பாராட்டுகள்.

மேன்மேலும் வளர நல்வாழ்த்துகள்.

தமிழில் தொழில் நுடப்பப்பதிவு - வாழ்க

ரெட்மகி on 13 October 2009 at 10:25 am said...

நன்றி cheena (சீனா) அண்ணா

Anonymous said...

It will be better if you separate it posts from other posts. it will give trouble for ranking it blogs

ரெட்மகி on 14 October 2009 at 12:22 pm said...

Thanks Shirdi

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved