கலக்கல் கிம் :
டென்னிஸ் போட்டிகளிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் கிம் (Kim Clijsters ). கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டென்னிஸ் ஆட வந்த கிம்.அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்தி உள்ளார்.இறுதிசுற்றில் டென்மார்க் வீராங்கனையான Caroline Wozniack எதிர் கொண்ட கிம் நேர் செட்களில் அவரை தோற்கடித்தார்.(7-5,6-3).இவர் இதற்கு முன் 2005 அமெரிக்க ஓபன் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை டென்னிஸ் வரலாற்றிலேயே மூன்று பெண்கள் மட்டுமே தாயான பின்பு கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பதக்கம் வென்றுள்ளனர்.அதில் கிம்மும் ஒருவர்.
- Kim Clijsters (BEL) - 2009 US Open
- Evonne Goolagong (AUS) - 1980 Wimbledon
- Margaret Court (AUS) - 1973 Australian, French and US Opens
அய்யோ செரினா :
கடந்த சனிக்கிழமை செரினாவுக்கும் ,கிம்முகும் (Kim Clijsters) இடையே அரையிறுதி ஆட்டம் நடந்தது.ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய கிம் முதல் செட்டை (6-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ,கிம்மின் கை ஓங்கியே இருந்தது.(5-6) என்ற கணக்கில் பின் தங்கிருந்த செரினா,போட்டியில் நிலைத்து நிற்க தனது சர்வீஸ் கேம் வென்றே ஆக வேண்டும் என்னும் நிலையில் சர்வீஸ் போட வந்தார்.ஆனால் தனது மோசமான சர்விசால் (15-30) என்று பின் தங்கினார்.
தோல்வியின் விளிம்பில் இருந்த செரினா சர்வீஸ் போடும்போது அவர் கோட்டின் மீது கால் வைத்தார் ( Foot Fault) என்று லைன் அம்பயர் கூறினார்.இதனால் அவர் மேலும் ஒரு புள்ளி பின்தங்கினார் (15-40) .செரினா தோல்வி அடையும் வாய்ப்பு மிக அதிகமானது இதனால் ஆத்திரமடைந்த அவர் லைன் அம்பயரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.தனது மட்டையையும் உடைத்தார்.நடத்தை விதிகளை மீறியதாக நடுவர்கள் ஒரு புள்ளியை செரினாவுக்கு அபராதமாக விதித்தனர் இதனால் நடப்பு சாம்பியன் ஆன செரினா தோல்வி அடைந்தார்.
0 கருத்துக்கள்:
Post a Comment