Firefox உள்ள பல வசதிகள் நாம் அறிந்ததே.இதில் கடவுச்சொல்லை சேமிக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாகும்.இதை பற்றி தெரியாதவர்கள் இங்கே அழுத்தவும். இதில் நாம் பல வலைத்தளங்களின் கடவுச்சொற்களை சேமித்து வைத்து இருப்போம்.ஆனால் எல்லா கடவுச்சொற்களையும் நினைவில் வைத்து கொள்ள முடியாது.
நான் அண்மையில் இயங்குதளத்தை நீக்கிவிட்டு மறுபடி பதியும்போது ,Firefox-ல் சேமித்து வைத்துள்ள கடவுச்சொற்களை எப்படி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது என்று தெரியவில்லை.இதற்கு எதாவது வசதிகள் உள்ளதா என்று இணையத்தில் தேடும் போது கிடைத்ததுதான் Password Exporter 1.2 என்ற அற்புதமான நீட்சி.இதை நிறுவினால் போதும் நாம் சுலபமாக கடவுச்சொற்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்து கொள்ளலாம்.நீங்கள் கடவுச்சொற்களை Crypt செய்து ஏற்றுமதி செய்யலாம்.இந்த நீட்சி மிகவும் பயன் உள்ளதாகும்.
இவ்வற்றை மாதம் ஒரு முறை பேக்கப் செய்து வைத்து விட்டால், நாம் பயன்படுத்தும் இயங்குதளம்(OS) பழுதுஅடையும்போது அல்லது FireFox -இல் பிரச்னை என்றால் நமது கடவுச்சொற்கள் அனைத்தையும் இழக்கத் தேவையில்லை.கீழ்கண்ட எளிய முறையை பயன்பற்றி நீங்கள் கடவுச்சொற்களை சேமிக்கலாம்.
படி 1:
இந்த நீட்சியை Firefox-உடன் இணைக்க இங்கே அழுத்தவும் "Password Exporter 1.2"
FireFox-ஐ restart செய்தபின்,Tools-->options-->Security செல்லவும்.Import/Export Passwords என்ற பட்டனை அழுத்தவும்...
படி 3:
உங்கள் தேவைக்கேற்ப Export Passwords அல்லது Import Passwords அழுத்தவும். XML அல்லது CSV கோப்புகளாக கடவுச்சொற்களை சேமிக்கலாம்.உங்கள் கடவுச்சொற்களை யாரும் பார்த்து புரிந்து கொள்ள முடியாதபடி க்ரிப்டிங் செய்து ஏற்றுமதி செய்ய Obfuscate UserNames/passwords என்ற Checkbox-ஐ தேர்வு செய்திடுங்கள்.இதே முறையை பயன்பற்றி நீங்கள் இறக்குமதியும் செய்திடலாம்.
அவ்வளவுதான்.Have Fun :)
1 கருத்துக்கள்:
ஒரு மாதகாலம் இலவசமக உங்கள் விளம்பரங்களை எமது வலைத்தளத்தில் பிரசுரிக்க இங்கே கிளிக் செய்யவும்
முக்கிய குறிப்பு : முதல் ஒரு மாதகாலம் மட்டுமே இங்கு இலவசமாக விளம்பரம் செய்யலாம் பிறகு இந்த இந்த வலைத்தளத்தில் விளம்பரம் செய்ய பணம் கொடுக்க வேண்டும்
ஒரு மாதத்திற்கான விளம்பர தொகை : £3.00
பணம் கொடுத்து விளம்பரம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Post a Comment