Thursday, 24 September 2009

Google's Sidewiki -- Picasa 3.5 -- Airtel to Vodafone -- Cricket


அட என்னங்க இது என்கிறீர்களா ?

ஒரு வலைத்தளத்திற்கு நாம் செல்வோமேயானால் ,அத்தளத்தை பற்றி கருத்துக்களை அவர்கள் தளத்தில் தான் பதிவு செய்ய முடியும்.ஆனால் sidewiki மூலம் நாம் எந்த தளத்தை பற்றியும் நம் கருத்தை பதிவு செய்ய முடியும்.

இதனால் என்ன பயன் ?

ஒரு வலைத்தளத்தை பற்றி மற்றவர்களின் கருத்தை தெரிந்து கொள்வதன் மூலம்,அத்தளத்தை பற்றி உண்மையான தகவல் நமக்கு கிடைக்கின்றது.மேலும் நமக்கு வேண்டிய விடயம் தளத்தில் கிடைக்குமா இல்லையா என்பதும் தெரியவருகின்றது.அதனுடைய நம்பகத்தன்மை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நம் கருத்தை எப்படி பதிவு செய்வது ?

Google Sidewiki என்ற முகவரிக்கு சென்று ,உங்கள் FireFox அல்லது Internet Explorer உடன் இணைத்து கொள்ளுங்கள்.

http://www.google.com/sidewiki


Picasa 3.5

இலவசமாக நமது புகைபடங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருளான பிகாசா,அதன் அடுத்த பதிவான பிகாசா 3.5 அறிமுகபடுத்தியுள்ளது.இதன் தரவிறக்க சுட்டி Picasa 3.5.இதற்கு தேவையான இயங்குதளம் விண்டோஸ் XP/VISTA/7.

http://picasa.google.com/


உங்கள் செல்போன் வழங்கிகளை மாற்றலாம் நம்பரை மாற்றாமலே:

இனி நாம் எந்த செல்போன் வழங்கிகளையும் நம்பரை மாற்றாமல் இருப்பதற்காக சகித்து கொண்டு இருக்கத் தேவையில்லை.பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்றை மாற்றி கொள்ளலாம்.

இதோ ,அதோ என தப்பித்து வந்த செல்போன் வழங்கிகள்,இனி நம்மை ஏமாற்ற முடியாது.இரண்டு முறை காலக்கெடுவை தவறியவர்கள் இம்முறை ,கண்டிப்பாக இத்திட்டத்தை செயல் படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பெருநகரங்களில் திட்டம் அமலுக்கு வருகின்றது. 2010 ,மார்ச் 20 ஆம் தேதி முதல் நாடெங்கிலும் அமலுக்கு வருகின்றது.Airtel வேண்டாமா,Vodafone இருக்குது அதுவும் வேண்டாமா Aircel, இல்லை டோகோமோ ,இல்லை ரிலையன்ஸ் இல்லை bsnl.

Have Fun:)

என்ன கொடுமை சார் இது :
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்தியா...

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Google's Sidewiki -- Picasa 3.5 -- Airtel to Vodafone -- CricketSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

2 கருத்துக்கள்:

RaaKu saamy on 24 September 2009 at 4:35 pm said...

hoi Maki,

super articles are so cute and useful.
can u tell me, which software is useful to type in tamil/

Nallathambi.

ரெட்மகி on 24 September 2009 at 5:44 pm said...

Nalla Thambi said...

hoi Maki,

super articles are so cute and useful.
can u tell me, which software is useful to type in tamil/

Nallathambi.
//
நீங்கள் இணையத்தளத்தில்
தட்டச்ச இந்த முகவரிக்கு செல்லுங்கள்.
http://www.google.com/transliterate/indic/tamil
....
தமிழில் தட்டச்ச பல இலவச மென்பொருள் கிடைக்கின்றது.அதிகம் பேரால் பரிதுரைக்கபடுவது
அழகி.அதை தரவிறக்க
http://www.azhagi.com/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

நன்றி நல்லதம்பி தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்.

 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved