நீங்கள் புதியதாய் கணினி வாங்கி உள்ளீர்களா? இல்லை இனி வாங்க உள்ளீர்களா? இதோ உங்களுக்கான பதிவு தான் இது.நாம் புதியதாய் கணினி வாங்கும்போது,அதில் எந்த விதமான நச்சுநிரல்களோ அல்லது தீங்குநிரல்களோ இல்லாமல் சுத்தமாக இருக்கும்.நாம் கணினியை உபயோகிக்க ஆரம்பித்ததும் நமக்கு தெரியாமலே பல நச்சுநிரல்களும் ,தீங்குநிரல்களும் கணினியை தாக்கும்.இதிலிருந்து எப்படி நமது கணினியை காப்பது என்று பார்க்கலாம்.
தீச்சுவரை கவனியுங்கள் (FireWall) :
நீங்கள் கணினியை முதன் முதல் இணையத்தில் இணைக்கும் முன் தீச்சுவரை கவனியுங்கள்.அணைத்து வைக்கபட்டிருந்தால் மீண்டும் அதன் சேவையை தொடங்கி வையுங்கள்.இது நமது பிணையத்தில் இருக்கும் மற்ற கணினிகலடமிருந்து எந்த தீங்குநிரல்களும் வராமல் பாதுகாக்கும்.நீங்கள் வாங்கிய மேசைக் கணினி அல்லது மடிக் கணினியில் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் XP2 இயங்குதளங்கள் பதியபட்டிருந்தால், தீச்சுவர் கோட நிலையில் தொடங்கப்பட்டிருக்கும்.இதை எங்கே சென்று உறுதி செய்வது?
Start -> Settings -> Control Panel -> Security Center -> Firewall Settings
கீழே படத்தில் காட்டபட்டுள்ளதை போல் தேர்வு செய்திடுங்கள்...
இயங்குதளத்தை புதுப்பித்தல்:
நீங்கள் புதியதாய் கணினி வாங்கி இருந்தாலும்,அதனுள் இருக்கும் இயங்குதளம் முழுமையாக புதிப்பிக்கபட்டிருக்காது. இதனை புதுப்பித்தல் மிக அவசியமான ஒன்றாகும்.இது கணினியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கின்றது.நீங்கள் புதுப்பித்தலை தானாக இயங்குமாறு அமைத்தல் அவசியம்.
Settings -> Control Panel -> Security Center -> Automatic Updates
கீழே படத்தில் காட்டபட்டுள்ளதை போல் தேர்வு செய்திடுங்கள். அதாவது தினமும் அதிகாலை மூன்று மணிக்கு உங்கள் கணினி புதுப்பிக்கப்படும்.
பாதுகாப்பு மென்பொருளை நிறுவுங்கள் :
தீச்சுவர் இயங்குகின்றது,கணினி தினமும் புதிப்பிக்கபடுகின்றது அப்புறம் ஏன் பாதுகாப்பு மென்பொருள் ? விண்டோஸ் இயங்குதளமானது , எந்தவித நிரலும் செயல்புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டது.அதனால் விண்டோசை தாக்கும் நச்சுநிரல்களும் ,தீங்கு நிரல்களும் மிக அதிகம்.தீசுவற்றால் இவற்றை தடுக்க முடியாது .இதற்கு நமக்கு தேவை நச்சுஎதிர்ப்பிகள்(AntiVirus).இவற்றில் பல இலவசமாக கிடைக்கின்றன. சிலவற்றின் சுட்டிகள் கீழே...
இவற்றை கணினியில் நிறுவவுதான் மூலம் போதிய பாதுகாப்பு கிடைக்கின்றது .மேலும் நீங்கள் இணையத்தில் ,பலவிதமான தளங்களுக்கு செல்லும்போது விழிப்புடன் இருப்பது அவசியம்.தேவையற்ற சுட்டிகளை சொடுக்குவது போன்றவற்றை தவிர்க்கலாம்.உங்கள் இணைய உலாவியும் புதிப்பிக்கபடுவது அவசியம்.இப்படி சிலபல விடயங்களை தவறாமல் செய்தோம் என்றால் உங்கள் கணினி எப்போதும் சுத்தமாக இருக்கும்.
6 கருத்துக்கள்:
Page design is good.
shirdi.saidasan@gmail.com said...
Page design is good.
// Thanks Keep Coming
மிகவும் பொறுப்பாக, அழகாக சொல்கிறீகள். உபயோகமான செய்திகள், பகிர்வுக்கு நன்றி.
எனது அனுபவத்தில் Free என்று வ்ருகிற
எதுவும் பரிபூர்ணமான பாதுகாப்பைத்
தரவில்லை.
கக்கு - மாணிக்கம் said...
மிகவும் பொறுப்பாக, அழகாக சொல்கிறீகள். உபயோகமான செய்திகள், பகிர்வுக்கு நன்றி
//
மிகவும் நன்றி அண்ணே தங்கள் தொடர் ஊக்கத்திற்கு
Thevesh said...
எனது அனுபவத்தில் Free என்று வ்ருகிற
எதுவும் பரிபூர்ணமான பாதுகாப்பைத்
தரவில்லை.
//
நீங்கள் சொல்வது உண்மைதான்.ஆனால் போதுமான பாதுகாப்பு கிடைக்கின்றது.
வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
Post a Comment