Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - என்ற தொடரின் குறுக்கு பதிவுதான் இது .முதல் பாகத்தை படிக்க கீழே அழுத்தவும்.
Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail
ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - பாகம் 1
இங்கே ஹாட்மெயில் கணக்குக்கு எப்படி உங்கள் ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் கணக்குகளை இறக்குமதி செய்வது என்று பார்ப்போம்.
ஜிமெயில் போல் ஹாட்மெய்லின் உள்ளே இதற்கான வசதி கிடையாது.ஆனாலும் அது TrueSwitch மூலம் அதற்கான வசதியை நமக்களிகின்றது.ஹாட்மெயில் கணக்குக்கு மற்ற கணக்குகளை மாற்ற இங்கே சொடுக்கவும் .TrueSwitch For HotMail
இங்கே Begin பட்டனை அழுத்தவும்.
படி1 :
இங்கே நீங்கள் ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் முகவரியை கொடுக்கவும்.அடுத்த கட்டத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும் .
படி 2:
உங்கள் ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் கணக்கில் இருந்து எதையெல்லாம் இறக்குமதி செய்திட வேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள்.தேர்வு செய்தபின் Submit பட்டனை அழுத்தவும்.
படி3 :
அவ்வளவுதான்:). உங்கள் ஹாட்மெயில் கணக்கில் நீங்கள் மேலே தேர்வு செய்த அத்தனையும் 24 மணி நேரத்திற்குள்ளாக இறக்குமதி செய்யப்பட்டுவிடும்.Have Fun :)
குறிப்பு:-
Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - பாகம் இரண்டின் முதல் படியே இப்பதிவுதான்.பாகம் இரண்டில் நான் எழுதவிருப்பது Yahoomail to Gmail பற்றி.நன்றி...
0 கருத்துக்கள்:
Post a Comment