Wednesday 30 September, 2009

மைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security Credentials

நம் கணினியை பாதுகாக்க பலவிதமான இலவச ஆன்டிவைரஸ் மென்பொருள்களை நிறுவி இருப்போம் .சிலர் பாதுகாப்பு கருதி காசு கொடுத்து மென்பொருளை நிறுவி இருப்பார்கள்.நாம் நிறுவிய ஆன்டிவைரஸ் மென்பொருளால் கணினியின் வேகம் வெகுவாக குறைவதை கண்கூடாக பார்க்கின்றோம்.இதற்கெல்லாம் மாற்றாக மைக்ரோசாப்ட் வழங்குகின்றது Microsoft Security Essentials முற்றிலும் இலவசமாக.

இது மைக்ரோசாப்டின் முந்தைய பாதுகாப்பு மென்பொருள்களான Windows Live OneCare and Windows Defender மாற்றாகும்.



இதன் சிறப்பு அம்சங்கள் :
  1. தரவிறக்க இலகுவானது 10 mb மட்டுமே.
  2. ஒரு நிமிடத்திற்கு உள்ளாகவே பதிந்து விடலாம்.
  3. தானாகவே அப்டேட் செய்து கொள்ளும்.
  4. கணினியின் வேகம் குறையாது.
  5. முழுமையான பாதுகாப்பு Spyware,Malware மற்றும் வைரஸ் போன்றவற்றில்லுருந்து.
மென்பொருள் நிறுவ தேவையானவை :
  1. விண்டோஸ் xp/vista/7 இவற்றில் ஏதேனும் ஒரு இயங்குதளம்.
  2. உங்கள் இயங்குதளம் (OS) Genuine Copy ஆக இருத்தல் அவசியம்.
தரவிறக்க சுட்டி : MicroSoft Security Essentials Have Fun :)
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This மைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security CredentialsSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

5 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Tuesday 29 September, 2009

உங்கள் ப்ளாக்கில் help பட்டனை இணைப்பது எப்படி ?


நீங்கள் வலைபதிவரா ? இதோ உங்கள் தளத்திற்கு ஒரு பயனுள்ள இணைப்பு. நம் தளத்திற்கு வரும் நண்பர்களுக்கு சில நேரம் சந்தேகங்கள் எழும் ,அவற்றை கேட்க அவர்கள் பின்னூட்டம் இடலாம். சிலவற்றை தனிப்பட்ட முறையில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள்.ஆனால் நம்மில் பலர் பாதுகாப்பு கருதி ஈமெயில் முகவரியை கொடுத்திருக்க மாட்டும்.

இப்போது உங்கள் தளத்திற்கு வருபவர்கள் உங்களை எப்படித்தான் தொடர்பு கொள்வது ? இதோ உங்களுக்கான வழிமுறை. Snapbug என்ற தளம் இலவசமாக ஈமெயில் சேவையை நமக்கு அளிக்கின்றது.இதன் சிறப்பு எந்த பக்கத்தில் இருந்து help பட்டனை கிளிக் செய்கிறார்களோ ,அப்பக்கத்தின் ScreenShot நமக்கு அளிக்கும் .Help பட்டனை எப்படி உங்கள் தளத்துடன் இணைப்பது என்று பார்ப்போம்.(நான் இந்த பட்டனை ஏற்கனவே இணைத்து விட்டேன்.)

படி 1:
www.snapabug.com என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

படி 2 :
உங்களை தொடர்பு கொள்ளவேண்டிய ஈமெயில் முகவரியை கொடுத்து , உங்களுக்கு வேண்டியவாறு பட்டனை மாற்றி அமையுங்கள்.விரும்பினால் help என்பதற்கு மாற்றாக படத்தையும் தேர்வு செய்யலாம்.


படி 3 :
இப்போது அவர்கள் கொடுக்கும் html கோடினை காப்பி செய்து ,உங்கள் Blogger Template-இன்
முன்னால் இணைக்க வேண்டும்.

Html கோடினை இணைப்பது எப்படி?
1.உங்கள் பிளாக்கர் கணக்கினுள் நுழையுங்கள்.
2.Layout -> Edit Html கிளிக் செய்யுங்கள்.
3.இப்போது
தேடி அதற்கு மேல் Html கோடினை காப்பி செய்யுங்கள்.
4.Save Template கிளிக் செய்யுங்கள்.
5.இப்போது உங்கள் ப்ளாக்கில் help button மிளிரும்.Have Fun :)

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This உங்கள் ப்ளாக்கில் help பட்டனை இணைப்பது எப்படி ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

2 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday 28 September, 2009

Google,Yahoo,Microsoft,Facebook,Twitter பற்றி கூகுள் என்ன நினைக்கின்றது ?



நாம் கூகுளில் தேடும் வார்த்தைகளை கொண்டு ,கூகுள் Auto Suggest எனும்
முறைமூலம் ,உங்கள் keyword-ஐ பொறுத்து சில வார்த்தைகளை பரிந்துரைக்கும்.
உதாரணமாக நீங்கள் Google is என்று டைப் செய்தால்,சில வார்த்தைகளை பரிந்துரைக்கும்.அப்படி சில இணையதளங்களை பற்றி கூகுள் என்ன நினைக்கிறது என்று தேடும்போது கிடைத்த சில ருசிகர தகவல்கள்...


1.Google


2.Yahoo

3.Microsoft
4.Facebook



5.Twitter
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Google,Yahoo,Microsoft,Facebook,Twitter பற்றி கூகுள் என்ன நினைக்கின்றது ?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Friday 25 September, 2009

FireFox-ல் Password-களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது எப்படி?

Firefox உள்ள பல வசதிகள் நாம் அறிந்ததே.இதில் கடவுச்சொல்லை சேமிக்கும் வசதி மிகவும் பயனுள்ளதாகும்.இதை பற்றி தெரியாதவர்கள் இங்கே அழுத்தவும். இதில் நாம் பல வலைத்தளங்களின் கடவுச்சொற்களை சேமித்து வைத்து இருப்போம்.ஆனால் எல்லா கடவுச்சொற்களையும் நினைவில் வைத்து கொள்ள முடியாது.


நான் அண்மையில் இயங்குதளத்தை நீக்கிவிட்டு மறுபடி பதியும்போது ,Firefox-ல் சேமித்து வைத்துள்ள கடவுச்சொற்களை எப்படி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது என்று தெரியவில்லை.இதற்கு எதாவது வசதிகள் உள்ளதா என்று இணையத்தில் தேடும் போது கிடைத்ததுதான் Password Exporter 1.2 என்ற அற்புதமான நீட்சி.இதை நிறுவினால் போதும் நாம் சுலபமாக கடவுச்சொற்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்து கொள்ளலாம்.நீங்கள் கடவுச்சொற்களை Crypt செய்து ஏற்றுமதி செய்யலாம்.இந்த நீட்சி மிகவும் பயன் உள்ளதாகும்.

இவ்வற்றை மாதம் ஒரு முறை பேக்கப் செய்து வைத்து விட்டால், நாம் பயன்படுத்தும் இயங்குதளம்(OS) பழுதுஅடையும்போது அல்லது FireFox -இல் பிரச்னை என்றால் நமது கடவுச்சொற்கள் அனைத்தையும் இழக்கத் தேவையில்லை.கீழ்கண்ட எளிய முறையை பயன்பற்றி நீங்கள் கடவுச்சொற்களை சேமிக்கலாம்.


படி 1:

இந்த நீட்சியை Firefox-உடன் இணைக்க இங்கே அழுத்தவும் "Password Exporter 1.2"

படி 2:

FireFox-ஐ restart செய்தபின்,Tools-->options-->Security செல்லவும்.Import/Export Passwords என்ற பட்டனை அழுத்தவும்...



படி 3:

உங்கள் தேவைக்கேற்ப Export Passwords அல்லது Import Passwords அழுத்தவும். XML அல்லது CSV கோப்புகளாக கடவுச்சொற்களை சேமிக்கலாம்.உங்கள் கடவுச்சொற்களை யாரும் பார்த்து புரிந்து கொள்ள முடியாதபடி க்ரிப்டிங் செய்து ஏற்றுமதி செய்ய Obfuscate UserNames/passwords என்ற Checkbox-ஐ தேர்வு செய்திடுங்கள்.இதே முறையை பயன்பற்றி நீங்கள் இறக்குமதியும் செய்திடலாம்.




அவ்வளவுதான்.Have Fun :)

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This FireFox-ல் Password-களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது எப்படி?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

1 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Thursday 24 September, 2009

Google's Sidewiki -- Picasa 3.5 -- Airtel to Vodafone -- Cricket


அட என்னங்க இது என்கிறீர்களா ?

ஒரு வலைத்தளத்திற்கு நாம் செல்வோமேயானால் ,அத்தளத்தை பற்றி கருத்துக்களை அவர்கள் தளத்தில் தான் பதிவு செய்ய முடியும்.ஆனால் sidewiki மூலம் நாம் எந்த தளத்தை பற்றியும் நம் கருத்தை பதிவு செய்ய முடியும்.

இதனால் என்ன பயன் ?

ஒரு வலைத்தளத்தை பற்றி மற்றவர்களின் கருத்தை தெரிந்து கொள்வதன் மூலம்,அத்தளத்தை பற்றி உண்மையான தகவல் நமக்கு கிடைக்கின்றது.மேலும் நமக்கு வேண்டிய விடயம் தளத்தில் கிடைக்குமா இல்லையா என்பதும் தெரியவருகின்றது.அதனுடைய நம்பகத்தன்மை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

நம் கருத்தை எப்படி பதிவு செய்வது ?

Google Sidewiki என்ற முகவரிக்கு சென்று ,உங்கள் FireFox அல்லது Internet Explorer உடன் இணைத்து கொள்ளுங்கள்.

http://www.google.com/sidewiki


Picasa 3.5

இலவசமாக நமது புகைபடங்களை எடிட் செய்ய உதவும் மென்பொருளான பிகாசா,அதன் அடுத்த பதிவான பிகாசா 3.5 அறிமுகபடுத்தியுள்ளது.இதன் தரவிறக்க சுட்டி Picasa 3.5.இதற்கு தேவையான இயங்குதளம் விண்டோஸ் XP/VISTA/7.

http://picasa.google.com/


உங்கள் செல்போன் வழங்கிகளை மாற்றலாம் நம்பரை மாற்றாமலே:

இனி நாம் எந்த செல்போன் வழங்கிகளையும் நம்பரை மாற்றாமல் இருப்பதற்காக சகித்து கொண்டு இருக்கத் தேவையில்லை.பிடிக்கவில்லை என்றால் வேறு ஒன்றை மாற்றி கொள்ளலாம்.

இதோ ,அதோ என தப்பித்து வந்த செல்போன் வழங்கிகள்,இனி நம்மை ஏமாற்ற முடியாது.இரண்டு முறை காலக்கெடுவை தவறியவர்கள் இம்முறை ,கண்டிப்பாக இத்திட்டத்தை செயல் படுத்த வேண்டுமென மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பெருநகரங்களில் திட்டம் அமலுக்கு வருகின்றது. 2010 ,மார்ச் 20 ஆம் தேதி முதல் நாடெங்கிலும் அமலுக்கு வருகின்றது.Airtel வேண்டாமா,Vodafone இருக்குது அதுவும் வேண்டாமா Aircel, இல்லை டோகோமோ ,இல்லை ரிலையன்ஸ் இல்லை bsnl.

Have Fun:)

என்ன கொடுமை சார் இது :
ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்தியா...

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Google's Sidewiki -- Picasa 3.5 -- Airtel to Vodafone -- CricketSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

2 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Wednesday 23 September, 2009

உங்களுடைய Twitter Tweets இப்போது ரீடரில் படிக்கலாம் - எப்படி?

இனி நீங்கள் ட்விட்டர் tweets படிக்க லாகின் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.இப்போது உங்கள் ரீடரில் படிக்கலாம்.இந்த சேவையை ReadTwit
என்ற இணையதளம் நமக்கு இலவசமாக தருகின்றது.ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதும்.கீழ்கண்ட எளிய முறையை பின்பற்றி நீங்களும் சுலபமாக பயன் பெறலாம்.



படி 1:

www.readtwit.com என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.Get Fed என்ற பட்டனை சொடுக்குங்கள்.

படி 2:

உங்கள் Twitter கணக்குடன் லாகின் செய்யுங்கள்.

படி 3:

உங்களுக்கு வேண்டிய ரீடரை தேர்வு செய்யுங்கள்.அவ்வளவுதான் Have Fun :)


Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This உங்களுடைய Twitter Tweets இப்போது ரீடரில் படிக்கலாம் - எப்படி?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

0 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday 21 September, 2009

புதியதாய் கணினி வாங்குபவர்களுக்கு....


நீங்கள் புதியதாய் கணினி வாங்கி உள்ளீர்களா? இல்லை இனி வாங்க உள்ளீர்களா? இதோ உங்களுக்கான பதிவு தான் இது.நாம் புதியதாய் கணினி வாங்கும்போது,அதில் எந்த விதமான நச்சுநிரல்களோ அல்லது தீங்குநிரல்களோ இல்லாமல் சுத்தமாக இருக்கும்.நாம் கணினியை உபயோகிக்க ஆரம்பித்ததும் நமக்கு தெரியாமலே பல நச்சுநிரல்களும் ,தீங்குநிரல்களும் கணினியை தாக்கும்.இதிலிருந்து எப்படி நமது கணினியை காப்பது என்று பார்க்கலாம்.


தீச்சுவரை கவனியுங்கள் (FireWall) :

நீங்கள் கணினியை முதன் முதல் இணையத்தில் இணைக்கும் முன் தீச்சுவரை கவனியுங்கள்.அணைத்து வைக்கபட்டிருந்தால் மீண்டும் அதன் சேவையை தொடங்கி வையுங்கள்.இது நமது பிணையத்தில் இருக்கும் மற்ற கணினிகலடமிருந்து எந்த தீங்குநிரல்களும் வராமல் பாதுகாக்கும்.நீங்கள் வாங்கிய மேசைக் கணினி அல்லது மடிக் கணினியில் விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் XP2 இயங்குதளங்கள் பதியபட்டிருந்தால், தீச்சுவர் கோட நிலையில் தொடங்கப்பட்டிருக்கும்.இதை எங்கே சென்று உறுதி செய்வது?

Start -> Settings -> Control Panel -> Security Center -> Firewall Settings

கீழே படத்தில் காட்டபட்டுள்ளதை போல் தேர்வு செய்திடுங்கள்...


இயங்குதளத்தை புதுப்பித்தல்:

நீங்கள் புதியதாய் கணினி வாங்கி இருந்தாலும்,அதனுள் இருக்கும் இயங்குதளம் முழுமையாக புதிப்பிக்கபட்டிருக்காது. இதனை புதுப்பித்தல் மிக அவசியமான ஒன்றாகும்.இது கணினியின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கின்றது.நீங்கள் புதுப்பித்தலை தானாக இயங்குமாறு அமைத்தல் அவசியம்.

Settings -> Control Panel -> Security Center -> Automatic Updates

கீழே படத்தில் காட்டபட்டுள்ளதை போல் தேர்வு செய்திடுங்கள். அதாவது தினமும் அதிகாலை மூன்று மணிக்கு உங்கள் கணினி புதுப்பிக்கப்படும்.


பாதுகாப்பு மென்பொருளை நிறுவுங்கள் :

தீச்சுவர் இயங்குகின்றது,கணினி தினமும் புதிப்பிக்கபடுகின்றது அப்புறம் ஏன் பாதுகாப்பு மென்பொருள் ? விண்டோஸ் இயங்குதளமானது , எந்தவித நிரலும் செயல்புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டது.அதனால் விண்டோசை தாக்கும் நச்சுநிரல்களும் ,தீங்கு நிரல்களும் மிக அதிகம்.தீசுவற்றால் இவற்றை தடுக்க முடியாது .இதற்கு நமக்கு தேவை நச்சுஎதிர்ப்பிகள்(AntiVirus).இவற்றில் பல இலவசமாக கிடைக்கின்றன. சிலவற்றின் சுட்டிகள் கீழே...

  1. Avg Free 8.5
  2. Avast
  3. Kaspersky

இவற்றை கணினியில் நிறுவவுதான் மூலம் போதிய பாதுகாப்பு கிடைக்கின்றது .மேலும் நீங்கள் இணையத்தில் ,பலவிதமான தளங்களுக்கு செல்லும்போது விழிப்புடன் இருப்பது அவசியம்.தேவையற்ற சுட்டிகளை சொடுக்குவது போன்றவற்றை தவிர்க்கலாம்.உங்கள் இணைய உலாவியும் புதிப்பிக்கபடுவது அவசியம்.இப்படி சிலபல விடயங்களை தவறாமல் செய்தோம் என்றால் உங்கள் கணினி எப்போதும் சுத்தமாக இருக்கும்.


Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This புதியதாய் கணினி வாங்குபவர்களுக்கு....SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

6 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Thursday 17 September, 2009

Opera mini 5 - அதிவேகமான செல்போன் உலாவி அறிமுகம்.

செல்போன்களுக்கு சிறந்த உலாவியாக இருக்கும் ஒபேரா மினி,அதன்
அடுத்த வெர்சனை அறிமுகபடுத்தியுள்ளது.ஏற்கனவே மிகவும் பிரபலமாக
உள்ள ஒபேரா மினி 4.2-வின் அடுத்த வெளியீடுதான் இது.ஒபேரா மினி
4.2-வில் இல்லாத பல முக்கிய வசதிகளை இதில் உள்ளது.

இதன் சிறப்பு :
  1. Tabbed Browsing.
  2. Password Manager.
  3. Touch and Keypad.
  4. Built For Speed.
  5. Power Scrolling.
  6. Fast Search.
  7. Speed Dial.

இந்த அதிவேக ஒபேரா மினி 5 தரவிறக்க உங்கள் செல்போன் உலாவியில் m.opera.com/next என்ற முகவரிக்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு Opera Mini 5.

எப்படி செயல்படுகின்றது:

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Opera mini 5 - அதிவேகமான செல்போன் உலாவி அறிமுகம்.SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

4 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Wednesday 16 September, 2009

Spacebook - Dual Screen Laptop Coming in December


உலகின் முதல் இரண்டு திரை உள்ள மடிக்கணினியை Gscreen.( Alaska Based Techonlogy Company) வரும் டிசம்பரில்அறிமுகப்படுத்த உள்ளது.



Expected Configuration
  1. Screen - Dual 15.4 Inch Screen
  2. Processor - Intel Core 2 Duo
  3. Memory - About 4 GB RAM
  4. Graphics - VGA NVidia GF 900M GT Discrete
  5. Hard drive - Powerful 7200 RPM Hard drive(500 GB+)
  6. Battery - 6 to 9 Cell Battery
  7. Price - US$ 3000


இக்கணினி முதல் கட்டமாக Amazon.Com மூலம் கீழ்கண்ட நாடுகளில் கிடைக்கும்.இதில் இந்தியா இல்லை என்பது எரிச்சலூட்டுகின்றது.எனினும் கூடிய விரைவில்,இந்தியாவிலும் கிடைக்கும்.

Australia,Austria,Belgium,Canada,Chile,Czech Republic,Denmark,France,Germany,
HongKong,Hungary,Ireland,Italy,Japan,Luxembourg,Malaysia, Mexico,Netherlands,
New Zealand,Norway Philippines,Poland,Portugal,Saudi Arabia,Singapore,South Africa Spain,Sweden,Switzerland,Taiwan,Thailand,United Arab Emirates,Finland,United Kingdom.












Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Spacebook - Dual Screen Laptop Coming in DecemberSocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

0 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Google Fast Flip - செய்திகளை வேகமாக படிக்க...

கூகுள் லேப்ஸ் மூலம் பல விதமான புதுமைகளை புகுத்தி வரும் கூகுளின் புதிய அறிமுகம் தான் கூகுளின் பாஸ்ட் ப்லிப்.இதன் மூலம் நாம் இனி செய்திகளை மிக வேகமாகவும் அதிக சிரமமுமில்லாமல் படிக்கலாம்.


இதனால் என்ன பயன்?

இனி நீங்கள் உலகச் செய்திகளை படிக்க எங்கும் அலைய தேவை இல்லை.அத்தனை செய்திகளையும் அதி வேகமாக பாஸ்ட் ப்லிப் வழங்குகிறது.

எனென்ன செய்திகள் படிக்கலாம் ?

அரசியல்,வணிகம்,விளையாட்டு,உலகம்,அமெரிக்கா,உடல்நலம்,தொழில்நுட்பம்,
பொழுதுபோக்கு,பயணம் இப்படி பலபல செய்திகள் உடனுக்குடன்.

ஏன் கூகுள் ப்லிப் :
  1. நீங்கள் செய்திப் பக்கங்கள் தரவிறக்க காத்திருக்க தேவையில்லை.
  2. விரும்பினால் மட்டுமே , விவரமாக படிக்கலாம்.
  3. இதன் அசத்தலான வேகம்.
  4. இதன் பக்கங்கள் முழுக்க Tab மற்றும் Flip முறையில் இயங்குகிறது.
எங்கே படிப்பது ?
இதன் சுட்டி Google FastFlip
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Google Fast Flip - செய்திகளை வேகமாக படிக்க...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

1 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Tuesday 15 September, 2009

Windows Xp Taskbar-ஐ Windows 7 Taskbar போல் மாற்றுவது எப்படி?

நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது சர்வர் 2003 பயன்படுத்துபவரா ? உங்கள் taskbar சலிப்பு தட்டுகின்றதா ? இதோ உங்களுக்கான மென்பொருள். இதை நிறுவினால் போதும் அடுத்த நொடி உங்கள் Xp Taskbar விண்டோஸ் 7 Taskbar போல் மாறிவிடும்.மிகவும் இலகுவான மென்பொருள்,இதன் அளவு மொத்தம் 250kb மட்டுமே. தரவிறக்க சுட்டி கீழே...

Change Windows Xp Taskbar like Windows 7.

உங்கள் பழைய Windows Xp Taskbar:

உங்கள் புதிய விண்டோஸ் Xp Taskbar ,விண்டோஸ் 7 Taskbar போல் :
Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Windows Xp Taskbar-ஐ Windows 7 Taskbar போல் மாற்றுவது எப்படி?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

0 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Monday 14 September, 2009

கலக்கல் கிம்...அய்யோ செரினா...


கலக்கல் கிம் :

டென்னிஸ் போட்டிகளிலிருந்து 2007 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் கிம் (Kim Clijsters ). கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் டென்னிஸ் ஆட வந்த கிம்.அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்தி உள்ளார்.இறுதிசுற்றில் டென்மார்க் வீராங்கனையான Caroline Wozniack எதிர் கொண்ட கிம் நேர் செட்களில் அவரை தோற்கடித்தார்.(7-5,6-3).இவர் இதற்கு முன் 2005 அமெரிக்க ஓபன் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை டென்னிஸ் வரலாற்றிலேயே மூன்று பெண்கள் மட்டுமே தாயான பின்பு கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பதக்கம் வென்றுள்ளனர்.அதில் கிம்மும் ஒருவர்.

  1. Kim Clijsters (BEL) - 2009 US Open
  2. Evonne Goolagong (AUS) - 1980 Wimbledon
  3. Margaret Court (AUS) - 1973 Australian, French and US Opens

அய்யோ செரினா :

கடந்த சனிக்கிழமை செரினாவுக்கும் ,கிம்முகும் (Kim Clijsters) இடையே அரையிறுதி ஆட்டம் நடந்தது.ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய கிம் முதல் செட்டை (6-4) என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் ,கிம்மின் கை ஓங்கியே இருந்தது.(5-6) என்ற கணக்கில் பின் தங்கிருந்த செரினா,போட்டியில் நிலைத்து நிற்க தனது சர்வீஸ் கேம் வென்றே ஆக வேண்டும் என்னும் நிலையில் சர்வீஸ் போட வந்தார்.ஆனால் தனது மோசமான சர்விசால் (15-30) என்று பின் தங்கினார்.

தோல்வியின் விளிம்பில் இருந்த செரினா சர்வீஸ் போடும்போது அவர் கோட்டின் மீது கால் வைத்தார் ( Foot Fault) என்று லைன் அம்பயர் கூறினார்.இதனால் அவர் மேலும் ஒரு புள்ளி பின்தங்கினார் (15-40) .செரினா தோல்வி அடையும் வாய்ப்பு மிக அதிகமானது இதனால் ஆத்திரமடைந்த அவர் லைன் அம்பயரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.தனது மட்டையையும் உடைத்தார்.நடத்தை விதிகளை மீறியதாக நடுவர்கள் ஒரு புள்ளியை செரினாவுக்கு அபராதமாக விதித்தனர் இதனால் நடப்பு சாம்பியன் ஆன செரினா தோல்வி அடைந்தார்.


Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This கலக்கல் கிம்...அய்யோ செரினா...SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

0 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS

Hotmail முகவரிக்கு Gmail,Yahoomail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி?


Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - என்ற தொடரின் குறுக்கு பதிவுதான் இது .முதல் பாகத்தை படிக்க கீழே அழுத்தவும்.

Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail
ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - பாகம் 1

இங்கே ஹாட்மெயில் கணக்குக்கு எப்படி உங்கள் ஜிமெயில் மற்றும் யாஹூ மெயில் கணக்குகளை இறக்குமதி செய்வது என்று பார்ப்போம்.

ஜிமெயில் போல் ஹாட்மெய்லின் உள்ளே இதற்கான வசதி கிடையாது.ஆனாலும் அது TrueSwitch மூலம் அதற்கான வசதியை நமக்களிகின்றது.ஹாட்மெயில் கணக்குக்கு மற்ற கணக்குகளை மாற்ற இங்கே சொடுக்கவும் .TrueSwitch For HotMail



இங்கே Begin பட்டனை அழுத்தவும்.

படி1 :

இங்கே நீங்கள் ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் முகவரியை கொடுக்கவும்.அடுத்த கட்டத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியை கொடுத்து Continue பட்டனை அழுத்தவும் .


படி 2:

உங்கள் ஜிமெயில் அல்லது யாஹூ மெயில் கணக்கில் இருந்து எதையெல்லாம் இறக்குமதி செய்திட வேண்டும் என்பதனை தேர்வு செய்யுங்கள்.தேர்வு செய்தபின் Submit பட்டனை அழுத்தவும்.



படி3 :

அவ்வளவுதான்:). உங்கள் ஹாட்மெயில் கணக்கில் நீங்கள் மேலே தேர்வு செய்த அத்தனையும் 24 மணி நேரத்திற்குள்ளாக இறக்குமதி செய்யப்பட்டுவிடும்.Have Fun :)



குறிப்பு:-

Gmail முகவரிக்கு Yahoomail, Hotmail, AOLmail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி - பாகம் இரண்டின் முதல் படியே இப்பதிவுதான்.பாகம் இரண்டில் நான் எழுதவிருப்பது Yahoomail to Gmail பற்றி.நன்றி...

Add To Google Bookmarks Twit This Add To Facebook Add To Yahoo Digg This Hotmail முகவரிக்கு Gmail,Yahoomail ஆகியவற்றை இறக்குமதி செய்வது எப்படி?SocialTwist Tell-a-Friend

உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழிஷ் ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி

0 கருத்துக்கள் Download As PDF
பதிவுகளை ஈமெயிலில் பெற... Subscribe Via RSS
 

கிராமத்து பையன். Copyright 2009 All Rights Reserved